கொரோனா வைரஸ் பாதிப்பால் காணாமல் போன வார,மாத இதழ்கள்

கொரோனா வைரஸ் பாதிப்பால் ஊரடங்கு அமலில் உள்ளதால் பத்திரிகைகள், வார, மாத இதழ்களின் விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

பல வார இதழ்கள் இணையத்தில் மட்டுமே காணக்கிடைக்கின்றன.

தினசரி செய்தித் தாள்களிலும் விளம்பரங்கள் மற்றும் திரைப்படச்செய்திகள் குறைந்ததால் பக்கங்கள் பாதியாக குறைந்துள்ளன.

செய்திகளை அறிந்துக் கொள்ள வீட்டில் முடங்கியிருக்கும் பொது மக்கள் தொலைக்காட்சிகள், மற்றும் சமூக ஊடகங்கள் – வலைத்தளங்களை நாடுவதால் ட பத்திரிகைகள் விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாக விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஏராளமான புத்தகங்கள், ஆய்வேடுகள் போன்றவையும் அச்சுக்குப் போகாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன

இந்த நிலை மேலும் தொடர்ந்தால் பாமர மக்கள் பத்திரிக்கை படிப்பதையே மறக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு விடுவார்கள்..?

ராஜ்குமார்

(யுகம் நியூஸ்)