சென்னை : இந்தியாவின்
72 -வது குடியரசு தினத்தை முன்னிட்டு ஜெயமணி சோஷியல் வெல்ஃபேர் டிரஸ்ட் சார்பில் சமூக சேவைக்கான விருது வழங்கும் நிகழ்ச்சி சென்னை,பிராட்வே, ஏழுகிணறு பகுதியிலுள்ள சென்னை மாநகராட்சி சமூக நலக்கூட அரங்கில் மிக சிறப்பாக நடைப்பெற்றது.

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக தலைமை செயலக அனைத்து பத்திரிக்கையாளர்கள் சங்கத்தின் தலைவரும், தமிழ் பாரம்பரிய கலாச்சார இயக்கத்தின் தலைவருமான முனைவர்.குமார் தமிழ் திரைப்பட குணச்சித்திர நடிகர் அருள்மணி, காமெடி நடிகர் சின்ராசு.சமூக ஆர்வலர் ராஜ்குமார் ஆகியோர் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர்.

இந்த நிகழ்வில் தமிழகத்தின் பாரம்பரிய கலையை பறைசாற்றும் விதமாக பல்வேறு கலை நிகழ்ச்சிகள் அறங்கேறியது. குறிப்பாக தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்து வந்திருந்த
மாணவ, மாணவிகளின் சிலம்பம், கரகாட்டம்,சாட்டை குச்சி, ஒயிலாட்டம், யோகாசனங்கள், நாட்டுப்புற நடனங்கள் அனைவரையும் கவர்ந்தது.
மேலும் இந்நிகழ்வில் கொரோனா தொற்று கால கட்டத்தில் சிறப்பாக சமூக சேவையாற்றிய சுமார் 100 பேருக்கு குறிப்பாக மருத்துவர், ஆசிரியர்,கலைத்துறையினர், பத்திரிக்கை துறையினர் உள்ளிட்ட பல்வேறு துறையை சேர்ந்தவர்களுக்கு சிறந்த சமூக சேவகர் மற்றும் சிறந்த சாதனையாளர் விருதுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டது.

இந்நிகழ்வின் இறுதியில்
ஜெயமணி சோஷியல் வெல்பேர் டிரஸ்டின் நிறுவனர் மறைந்த தெய்வத்திரு பன்னீர் செல்வம் ஐயா அவர்களின் நினைவை போற்றும் வகையில் டாக்டர் . கண்மணி அவர்களால் சிறப்பு விருந்தினர்கள் முன்னிலையில் இந்த வருட நாள்காட்டி வெளியிடப்பட்டது. மழை வளத்தை பேணி காக்கும் நோக்கில் மரங்கன்று வழங்கப்பட்டது.

இவ்விழா ஏற்பாடுகளை தமிழ் பாரம்பரிய கலாச்சார இயக்கத்தின் துணைத் தலைவர்
முனைவர்.கண்மணி மற்றும் ஜெயமணி சோஷியல் வெல்பேர் டிரஸ்டின் செயலாளரும்,
சமூக ஆர்வலருமான ராஜ ராஜன் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.
எஸ்.ஏ.ராஜ்குமார்
(செய்தியாளர்)
