வேளச்சேரி:
ஜனநாயக அனைத்து பத்திரிகை உறவுகள் பாதுகாப்பு நல சங்கம் – தமிழ்நாடு மற்றும் போர்டீஸ் மலர் மருத்துவமனை, டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை, கிளவுட் டெண்டல் மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச மருத்துவ முகாம் சென்னை – வேளச்சேரி,நேரு உயர்நிலைப் பள்ளியி ல் ஜனநாயக அனைத்து பத்திரிகை உறவுகள் பாதுகாப்பு நல சங்க தலைவர் டி.எம்.தருமராஜா (D.Astro ) அவர்கள் தலைமையில் நடைபெற்றது,

மேலும் இந்த நிகழ்ச்சியில் உதவிக்கரம் பத்திரிகை ஆசிரியரும், ஜனநாயக அனைத்து பத்திரிகை உறவுகள் பாதுகாப்பு நலச்சங்கத்தின் கௌரவ ஆலோசகர் டி. ஏ. பி.வரத குட்டி,
மனசொலி – மக்கள் உறவு பத்திரிகை ஆசிரியர் மற்றும் தமிழ்நாடு சிறு பத்திரிகையாளர்கள் சங்க தலைவர் க.குரு, மக்கள் விருப்பம் பத்திரிகை உதவி ஆசிரியர், ஜனநாயக அனைத்து பத்திரிகை உறவுகள் பாதுகாப்பு நல சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவர் முனைவர்.எஸ்.ஜி.ரகுபதி, வேளச்சேரி நேரு உயர்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் கே. நேரு ஆகியோர் கலந்துக்கொண்டு குத்துவிளக்கு ஏற்றி மருத்துவ முகாமை துவக்கி வைத்தனர்.

மேலும் இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்களாக தமிழ்நாடு பத்திரிகையாளர் பாதுகாப்பு கூட்டமைப்பு தலைவர்
இளசை.கணேசன்,
பா.ஜ.க மாநில துணைத்தலைவர் கரு.நாகராஜன்,
தமிழக வணிகர் சங்கங்களின் பாதுகாப்பு பேரவை மாநில தலைவர் எஸ்.சௌந்தரராஜன், திமுக -சைதை கிழக்கு பகுதி செயலாளரும், 172_வது வட்ட மாமன்ற உறுப்பினரும், 13வது மண்டல குழு தலைவருமான இரா.துரைராஜ், பாஜக தென்சென்னை மாவட்ட தலைவர் வே.காளிதாஸ், காஞ்சித்தலைவன் பத்திரிகை ஆசிரியரும், தமிழ்நாடு சிறு பத்திரிகையாளர்கள் நலச்சங்கத்தின் செய்தி தொடர்பாளருமான
போரூர் பிரஸ்.குமார்
நம் மக்களின் சப்தம் பத்திரிகை ஆசிரியரும், தமிழ்நாடு பத்திரிகையாளர் பாதுகாப்பு கூட்டமைப்பின் பொருளாளருமான
ஆ.வீ.கன்னையா
ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர்,

மேலும் இதில் சங்க நிர்வாகிகளான பொருளாளர் என். சௌந்தர்ராஜன் துணைச் செயலாளர் வி..பாஸ்கர், செயற்குழு உறுப்பினர்கள்
யு. கண்ணன்,ஏ. ஆர் . திருநாவுக்கரசு,
கே.கவியரசன், டி.தீபக்குமார் குப்தா காஞ்சிபுரம் மாவட்ட அமைப்பாளர் டி. டென்னிஸ் ராஜா, தென் சென்னை மாவட்ட தலைவர் எஸ். வி. கோபிநாத், ஆகியோர் முன்னிலை வகித்தனர்,





இந்த நிகழ்ச்சியைதென் சென்னை மாவட்ட ஆலோசகர் எம். பி. நந்தகுமார் காஞ்சிபுரம் மாவட்ட துணை அமைப்பாளர் எல்.சகாயமேரி
தென்சென்னை மாவட்ட செயலாளர் கே.கண்ணகி தென் சென்னை மாவட்ட துணை தலைவர் கே. குமார், தென்சென்னை மாவட்ட துணைத் தலைவர் எம்.துரை இளஞ்செழியன்
மத்திய சென்னை மாவட்ட பொறுப்பாளர் எம். சதீஷ்குமார்,
செங்கல்பட்டு மாவட்ட அமைப்பாளர்
சி. இமையரசு உள்ளிட்ட நிர்வாகிகள் சிறப்பாக ஒருங்கிணைத்தனர்,

இறுதியில் மாநில பொருளாளர் என். சௌந்தர்ராஜன் நன்றியுரை ஆற்றினார்.

