தி.நகர்: கோ ஹைஜின் அறக்கட்டளை மற்றும் ரோட்டரி கிளப் ஆஃப் சென்னை எலைட் சார்பில் பள்ளி மாணவிகளுக்கு சுகாதார உபகரணங்கள் விநியோகம் மற்றும்
மொபைல் போன் பயன்பாடு குறித்த விழிப்புணர்வு நிகழ்வு தியாகராயர் நகர், மேட்லி சாலை பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ மங்கிசந்த் பந்தாரி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில்
கோ ஹைஜீன் அறக்கட்டளையின் நிறுவனர் மருத்துவர் சுமன் மேத்தா தலைமையிலும், ரோட்டரி கிளப் ஆஃப் சென்னை எலைட்டின் தலைவர் மருத்துவர் சந்தோஷ் ரத்தோட் அவர்கள் முன்னிலையிலும் நடைப்பெற்றது.

ஆலோசனை உளவியலாளர் ஷர்மிளா கத்ரேலா அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டார்.

மேலும் இந்நிகழ்வில் கோ ஹைஜீன் அறக்கட்டளையின் நிறுவனர் மருத்துவர் சுமன் மேத்தா, ரோட்டரி கிளப் ஆஃப் சென்னை எலைட்டின் தலைவர் மருத்துவர் சந்தோஷ் ரத்தோட், பேபி மைஷா மேத்தா ஆகியோர் 100க்கும் மேற்பட்ட பள்ளி மாணவிகளுக்கு கோ ஹைஜீன் கிட் சுகாதார பொருட்களை வழங்கினர்.

மேலும் இந்த கோ ஹைஜீன் கிட் பள்ளி குழந்தைகளின் தனிப்பட்ட சுகாதாரம் மற்றும் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்காக 8 பாக்டீரியா எதிர்ப்பு கொண்ட சானிடரி பேடுகள் மற்றும் காட்டன் பேண்டி பாத் சோப்பு, டூத் பிரஷ் டூத் பேஸ்ட்,5 சாஷே ஷாம்பு ஆகியவை வழங்கப்பட்டது.

இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்துக்கொணட உளவியல் ஆலோசகர் சர்மிளா கத்ரேலா அவர்கள பொறுப்பான மொபைல் போன் பயன்பாடு குறித்து ஈர்க்கக்கூடிய உரையை சிறப்பாக வழங்கினார்.

மேலும் தனது உரையில்
தனிப்பட்ட சுகாதாரத்தை பராமரிப்பதன் முக்கியத்துவம்,
பொறுப்பான மொபைல் போன் உபயோகப் பழக்கம்,
மொபைல் போன் பயன்பாட்டை எப்போது தவிர்க்க வேண்டும் என்பது பற்றிய விழிப்புணர்வு குறித்து விளக்கி பேசினார்.

பள்ளி மாணவிகளுக்கு சுகாதார பாதுகாப்பு கருவிகள் விநியோகம்,
மொபைல் போன் பயன்பாடு குறித்து ஷர்மிளா கத்ரேலா,
மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் திறம்பட பேசினர்.

ஆரோக்கியமான பழக்க வழக்கங்கள் மற்றும் பொறுப்பான தொழில்நுட்ப பயன்பாடு ஆகியவை சமநிலையான வாழ்க்கைக்கு அவசியம் குறித்து ஷர்மிளா கத்ரேலா விளக்கமாக பேசினார்.

கோ ஹைஜீன் அறக்கட்டளை மற்றும் ரோட்டரி கிளப் ஆஃப் சென்னை எலைட் நிர்வாகிகள் இந் நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

ஸ்ரீ மங்கிசந்த் பந்தாரி ஜெயின் மேல்நிலைப் பள்ளியில் நடைப்பெற்ற சுகாதார பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பொறுப்பான மொபைல் ஃபோன் பயன்பாட்டைத் தொடர்ந்து ஊக்குவிக்கும் நோக்கில்
பெற்றோர் மற்றும் இப்பள்ளியின் செயலாளர் பியூஷ் பண்டாரி மற்றும் தாளாளர் பிரதீப் சோர்டியா,
தலைமையாசிரியர் பி.சப்தகிரி மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.