கல்லைக் குறிச்சி: தமிழகத்தில் பூரண மதுவிலக்கை கொண்டு வர வலியுறுத்தி தமிழக மது ஒழிப்பு மக்கள் கூட்டியக்கத்தின் ஆலோசனை கூட்டம் கல்லைக் குறிச்சி ராஜா திருமண மண்டபத்தில் நடைப்பெற்றது.

மேலும் இந்த கூட்டத்தில் கூட்டியக்க உறுப்பினர்களாக
முனைவர் நா.சு.செல்வராஜ்,
புலவர் அய்யா மோகன்,
ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் சண்முகம்,
யோகா கலை.இரா.குணசேகரன்,
வேளாண்மை துறை ஓய்வு பெற்ற அலுவலர் அ.ஆறுமுகம், மகளிரணி செயலாளர் அ. நாகம்மாள்,
சைவ சித்தாந்தி நா. சக்திவேல்,
ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர். ப. சங்கரநாராயணன், ஊடக வியலாளர்.கே.ஜெயராமன்,
வியாபாரிகள் சங்கம் பி. ஜெயபிரகாஷ் ஆகியோர் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் ஏக மனதாக நிறைவேற்றப்பட்டன.
மாவட்ட ஆட்சியர் அவர்களை இவ்வியக்கத்தின் சார்பாக ஆகஸ்ட் 13ம் தேதி சந்தித்து. கீழ்கண்ட மனுவை அளிப்பது,
கல்லக்குறிச்சி மாவட்டத்தில் அனைத்து அரசு அலுவகங்களிலும் பணியிலுள்ள அரசு ஊழியர்கள். அலுவலர்கள். அனைத்து பள்ளி ஆசிரியர்கள். பணிநேரத்தில் மது அருந்திவிட்டு பணிபுரிவதை தடை செய்யவும், அவர்களை பணியிடை நீக்கம் செய்யவும், அவர்களை பற்றிய செய்தியை மக்களிடத்தில் விளம்பரப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மீண்டும் இக் கூட்டியக்கத்தின் விரிவடைந்த கூட்டத்தினை வருகிற 17.8.2024 ல் மீண்டும் கூட்டுவது என தீர்மானிக்க ப் பட்டது.
எஸ்.கல்யாண சுந்தரம் அவர்கள் நன்றியுரை ஆற்றினார்.