சென்னை:மத்திய சென்னை மேற்கு மாவட்டம் காங்கிரஸ் கலைப்பிரிவு சார்பில் மாவட்ட தலைவர் பா. சந்திரசேகர் தலைமையில் கலைப்பிரிவு மாநில செயலாளர் சூளை ராஜேந்திரன் முன்னிலையில் புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கரின் 132வது பிறந்தநாள் விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.

இந் நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக காங்கிரஸ் மாநில செயலாளர்கள் R. சேத்துப்பட்டு ராஜா, P.சுரேஷ்பாபு, காங்கிரஸ் மாணவர் பிரிவு மாநில பொறுப்பாளர். R.R.முத்துக்குமார், மா.வே.மலையராஜா, ஆகியோர் கலந்து கொண்டு
சூளை, பெரம்பூர் பேரக்ஸ் சாலை, வசந்தி தியேட்டர் அருகில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொது மக்களுக்கு இனிப்புகளை வழங்கி பிறந்தநாள் விழாவை கொண்டாடினர்.

இந்நிகழ்ச்சியில் கலைப் பிரிவு மாவட்ட பொதுச்செயலாளர் புல்லட் K.V.கோபிநாத், எழும்பூர் சர்க்கிள் தலைவர்கள் C.B.நரேஷ்குமார், M.D.சூர்யா, SC துறை மாவட்ட தலைவி P.ராஜலட்சுமி, S. ராஜேந்திரசிவம், J.குபேந்திரன், D.A.செல்வம், E.சுமதி ஏழுமலை,அனுஷா ராமன், T.மணி, M.மகேஷ் j.பாலாஜி, E.P.பிரவீன் குமார்,
உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் திறளாக கலந்துக்கொண்டனர்.

