நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளதை தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் விருப்ப மனுவை அளித்து வருகின்றனர்
இந்த நிலையில் தென் மேற்கு மாவட்ட திமுக வர்த்தக அணி துணை அமைப்பாளரும், மெட்ராஸ் லஸ் அரிமா சங்கத்தின் தலைவருமான லயன் சி.எஸ்.நந்தகுமார் அவர்கள் சென்னை மயிலாப்பூர் தொகுதிகுட்பட்ட 124 வது வட்ட திமுக சார்பில் மாமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிட 124 (அ) வட்ட பொறுப்பாளர் டி.கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கு வாய்ப்பு தந்து கட்சி பணியாற்றிட வேண்டி தென் மேற்கு மாவட்ட பொறுப்பாளரும், மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினருமான மயிலை த.வேலு அவர்களிடம் விருப்ப மனுவை அளித்தார்.
