சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி புதிய எஸ்.சி/எஸ்.டி பிரிவு தலைவர் எம்.பி.ரஞ்சன்குமார் அவர்களின் பதவியேற்பு விழா சத்தியமூர்த்தி பவனில் மிகப் பிரமாண்டமாக நடைப்பெற்றது.

https://youtu.be/jbBeqhmRm1M

தமிழக காங்கிரஸ் கட்சியின் எஸ்.சி பிரிவு தலைவராக எம். பி. ரஞ்சன்குமாரை கட்சி தலைமை நியமித்துள்ளது. தமிழக காங்கிரஸ் கட்சியின் எஸ்.சி பிரிவு தலைவராக செல்வப்பெருந்தகை அவர்கள் பதவி வகித்து வந்தார். கடந்த 7 ஆண்டுகளாக இதே பொறுப்பில் இருந்து வந்த நிலையில், தற்போது சட்டமன்ற காங்கிரஸ் தலைவராக பதவி வகித்து வருகிறார். இந்நிலையில், தமிழக காங்கிரஸ் கட்சியின் எஸ்.சி பிரிவுக்கு புதிய தலைவரை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

இந்நிலையில் எஸ்.சி பிரிவுக்கு புதிய தலைவரை நியமித்து டெல்லி காங்கிரஸ் தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதுகுறித்து அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் ஒப்புதலோடு, தமிழக காங்கிரஸ் கட்சியின் எஸ்.சி பிரிவு தலைவராக எம்.பி.ரஞ்சன் குமார் நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழக காங்கிரஸ் கட்சியின் எஸ்சி பிரிவு தலைவராக எம். பி. ரஞ்சன் குமார் பதவியேற்பு விழா நடைபெற்றது.
அகில இந்திய காங்கிரஸ் எஸ் சி. பிரிவு தலைவர் ராஜேஷ் லிலோத்தியா தலைமையில் நடைபெற்ற விழாவில் மாநிலத் தலைவர் கே. எஸ்.அழகிரி உள்ளிட்ட தலைவர்கள் கலந்துக்கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.

மேலும் இந்நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட தலைவர்கள், மாநில, மாவட்ட பொதுச் செயலாளர்கள் மற்றும் சர்க்கிள், வட்டத்தலைவர்கள் மகளிரணித் அணி நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்டோர் திறளாக கலந்து கொண்டனர்..