சென்னை: சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் (MHAA) தேர்தல் பிரச்சாரம் கடந்த சில நாட்களாக சூடு பிடித்துள்ளது.
சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க தேர்தல் நூலகர் பதவிக்கு போட்டியிடும் முனைவர் டி. கே. சத்தியசீலன் தீவிர வாக்கு சேகரிப்பு!

சென்னை உயர்நீதி மன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் தேர்தல் கடந்த 6 ஆண்டுகளாக நடத் தப்படாமல் இருந்தது.இதனால் தேர்தல் விதிமுறைகளை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்றம் தேர்தல் தொடர்பாக பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்திருந்தது.
இந்த நிலையில் தேர்தலை நடத்த உயர் நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டதை தொடர்ந்து தேர்தலை நடத்துவதற்கான தேர்தல் நடத்தும் அதிகாரிகளும் நியமிக்கப்பட்டள்ளனர்.
இதனையடுத்து உயர் நீதிமன்ற வழக்க றிஞர்கள் சங்க தேர்தல் ஜனவரி 9ம் தேதி நடத்துவது குறித்து தேர்தல் நடத்தும் அதிகாரிகள் முடிவு செய்து
அறிவித்தனர்.
இந்த தேர்தலில் தலைவர், துணைத்தலைவர், செயலாளர், பொருளாளர், நூலகர் மற்றும் மூத்த செயற்குழு உறுப்பினர்கள், இளைய செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கான பிரச்சாரம் மற்றும் தீவிர வாக்கு சேகரிப்பு உயர் நீதிமன்ற வளாகத்தில் விருவிருப்பாக நடந்து வருகிறது.
மேலும் இந்த தேர்தலில் நூலகர் பதவிக்கு போட்டியிடும் அகில இந்திய வழக்கறிஞர்கள் கூட்டமைப்பின் தலைவரும், மூத்த வழக்கறிஞருமான முனைவர் டி.கே.சத்தியசீலன் அவர்கள் மூத்த மற்றும் வழக்கறிஞர் களை சந்தித்து தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டு வருகிறார்.

மேலும் அவர் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் தேர்தலில் நூலகர் (Libarian) பதவிக்கு போட்டியிடும் என்னை தேர்வு செய்து வெற்றிப் பெற செய்தால் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்க (MHAA) உறுப்பினர்களுக்கு டிஜிட்டல் பார்கோடு(Digital Barcode) உடைய கார்டு வழங்கப்படும்,
நூலகம் நவீன மயமாக்கப்படும்,
வழக்குகளுக்கு தேவையான வரலாற்று சிறப்புமிக்க நீதிமன்ற ஆணைகள் டிஜிட்டல் முறையில் வழக்கறிஞர்கள் கிடைக்க ஆவணம் செய்யப்படும்,
வழக்கறிஞர்களுக்கு தேவையான நீதிமன்ற ஆணையங்கள் நேரடியாக புத்தக வடிவில் கிடைக்க வழிவகை செய்யப்படும்,உச்ச நீதிமன்றக் கிளையை தமிழ்நாட்டில் அமைத்திடவும்,
வழக்கறிஞர் பாதுகாப்பு சட்டம் இயற்ற வழிவகை செய்யப்படும் உள்ளிட்ட வாக்குறுதிகளை அளித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுப்பட்டு வாக்கு சேகரித்து வருகிறார்.
