சென்னை :தபால் துறை பணியாளர்களுக்கு எதிராக விரோதப்போக்கை கடைபிடிக்கும் மத்திய அரசை கண்டித்து அனைத்து தபால்துறை கணக்கு பிரிவு ஊழியர்கள் சங்கம் சார்பில் இரண்டு உள்ளிருப்பு உண்ணாவிரதப்போராட்டம்
எத்திராஜ் சாலையில் உள்ள மத்திய தபால்துறை கணக்கு பிரிவு அலுவலகத்தில்
தபால்துறை கணக்கு பிரிவு ஊழியர்கள் சங்கத்தின் வட்டார செயலாளர் ஆர்.பி.சுரேஸ் அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது.

இந்த உண்ணாவிரத அறவழிப் போராட்டத்தை இந்த சங்கத்தின் மாநில தலைவர் சந்தோஷ்குமார் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டு துவக்கி வைத்தார். இதில் தோழர்கள் சிவகாம சுந்தரி, புவனேஸ்வரி, சுஜாதா,கிரிஜா ,சிங்காரவேலவன், ஸ்டாலின், அயூப்கான் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டு தங்களது கண்டனத்தை தெரிவித்தனர்.