கள்ளக்குறிச்சி:
மக்கள் உரிமை நுகர்வோர் பாதுகாப்பு மையத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டம்
கள்ளக்குறிச்சியில் உள்ள ஏ. கே.டி.தங்கும் விடுதி
கூட்ட அரங்கில்
இதன் தலைவர். பி. எஸ். ரமேஷ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இதன் நிறுவனர் மனிதநேயர் என். எஸ். செல்வராஜ் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்.
மேலும் இக்கூட்டத்தில் அமைப்பு செயலாளர். பி. ஜெயப்பிரகாஷ். பிரச்சார செயலாளர். டி. கந்த நாதன்.
தலைமை நிலைய செயலாளர். ஏ. டி. சக்திவேல். மகளிரணி பொறுப்பாளர். ஐ. கௌதமி. உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மேலும் இதில் பல்வேறு தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன.
இறுதியில் பொருளாளர். பி. குமார் அவர்கள் நன்றியுரை நல்கினார்.

மேலும் இந்த பொதுக்குழுக்கூட்டத்தில்
மத்திய,மாநில அரசுகள்
சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தாமல் பொருளாதார அடிப்படையில் மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தி வறுமைக் கோட்டிற்க்கு கீழே உள்ள அனைத்து மக்களின் உயர்வுக்கும் சட்டம் இயற்ற வேண்டும்,
பொது மக்களுக்கு
இலவசங்களை வழங்காமல் அடிப்படை உரிமைகளான இலவச கல்வி மற்றும் மருத்துவம், படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு. குடியிருக்க அனைவருக்கும் தரமான வீடுகள் வழங்க வேண்டும்,
இந்திய நாடு பிச்சைக் காரர்கள் இல்லாத நாடாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்,
இந்திய நாட்டில் மது,போதை பொருட்கள் உற்பத்திக்கும், விற்பனைக்கும் தடை விதிக்க வேண்டும், மீறி மது,போதை பொருட்கள் வைத்திருந்தாலோ, விற்பனை செய்தாலோ, அவர்களுக்கு மரண தண்டனை விதித்திட சட்டம் இயற்ற வேண்டும்,
இந்திய தலைமை தேர்தல் ஆணையர்களை நியமிக்கும் மூவர் குழுவில். நாட்டின் பிரதமர், நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர்,
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோர் கொண்ட குழுவே மீண்டும் செயல்பட வேண்டும்,
இதில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி யை நீக்கிய மத்திய அரசின் சட்டதிருத்தத்தைதிரும்பெறவேண்டும், தலைமை தேர்தல் ஆணையர் தனது பணிக்காலத்தில் எந்த தவறுகள் செய்தாலும், அவர் மீது பணியிலிருக்கும்போதும்,ஓய்வு பெற்ற பின்பும் வழக்கு தொடர முடியாது என்கிற அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரான சட்டதிருத்தத்தை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும்,
தமிழ்நாடு அரசு தனது தேர்தல் வாக்குறுதியில் கூறியது போல
தமிழ்நாடு அரசில் பணிபுரியும் அரசு ஊழியர்கள். ஆசிரியர்கள். தினக்கூலி. ஒப்பந்த ஊழியர்கள் வெளிக்கொணர்தல் முறையில் நியமனம் செய்யப்பட்டிருந்தாலும். அவர்களை பணிநிரந்தம் செய்தும். வருங்காலங்களில் மேற்கண்ட முறைகளில் பணி நியமனம் செய்ய மாட்டோம் என்கிற வாக்குறுதியை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்,
தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடைகள், சத்துணவு. அங்கன்வாடி மையங்களில் வழங்கப்படும் உணவு பொருட்கள்,புழு, பூச்சிகள் இல்லாமலும் சாப்பிடுவதற்கு உகந்ததாகவும் வழங்கிட வேண்டும்
தமிழ்நாடு அரசு மாணவர்கள் பெற்ற கல்வி கடன்கள், விவசாயிகள் பெற்ற வேளான் கடன்களை உடனடியாக தள்ளுபடி செய்ய வேண்டும்,
தமிழகத்தில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் தரமான சாலை,கழிவுநீர் கால்வாய், தடையற்ற குடிநீர் வசதி செய்து தர வேண்டும்,
அரசு அலுவலர்களை மக்கள் பணிசெய்ய விடாமல் இடையூறு செய்யும் அரசியல் வாதிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்,
கள்ளக்குறிச்சி மாவட்டம் நைனார் பாளையம் கிராமத்தில் மக்கள் வசிக்கும் பகுதிக்கு அருகிலும், ஆற்றங்கரையோரத்தில் மனித திடக்கழிவு சுத்திகரிப்பு நிலையம் அமைக்க மக்களின் எதிர்ப்பையும் மீறி செயல்பட நினைக்கும் அரசு நிர்வாகத்தை கண்டிப்பதோடு, இந்த திட்டத்தை மக்கள் வசிக்காத வனத்துறை பகுதியில் செயல்படுத்த வும், நைனார் பாளையம் கிராம த்தில் இத்திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும் என மாவட்டநிர்வாகத்தை கேட்டுக்கொள்வது,
கல்லக்குறிச்சி புதிய பேருந்து நிலையத்தில் பயணிகளுக்கு பாதுகாப்பான குடிநீர், கழிவறைகள், ஓய்வறைகள் போன்றவற்றை உடனடியாக அமைத்து தர வேண்டும்,
கள்ளக்குறிச்சி புதிய பேருந்து நிலையத்திலிருந்து கள்ளக்குறிச்சி நகருக்குள் வரும் சங்கராபுரம், திருவண்ணாமலை,பெங்களூரு, திருப்பதி, கல்வராயன் மலை, கச்சராபாளையம் செல்லும் பேருந்துகள் அனைத்தும் பழைய பேருந்து நிலையம் வந்து செல்லவேண்டும்,
கல்லக்குறிச்சி புதிய பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள வணிக வளாக கடைகளை திறந்த வெளி ஏலத்தில் ஒளிவு மறைவின்றி ஏலம் விடப்பட வேண்டும்,
ஏல விளம்பரம் அனைத்து செய்தித்தாள்களிலும் விளம்பரம் செய்யப்பட்டு ஏலம் ஒளிப்பதிவு செய்யப்படவேண்டும்,
எவ்வித தவறுகளும் நடவாமலும் ஏலம் நடத்தப்படவேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
