புதுச்சேரி: வண்ண அருவி ஆர்ட் கேலரி சார்பில் பாரம்பரிய ஒவிய கண்காட்சி சிறப்புற நடைபெற்றது. இந்த ஓவிய கண்காட்சியினை புதுவை லாஸ்பேட்டை தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் எம். வைத்தியநாதன்அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார்.

இந்நிகழ்வில் முப்பரிமானங்கள் என்னும் தலைப்பிலான ஓவியக் கண்காட்சி புதுவையில் உள்ள வண்ண அருவி ஆர்ட் கேலரி சார்பில் நடைபெற்று வருகிறது.

மேலும் இந்நிகழ்வில் ஓவியர் சுகுமாரன் மற்றும் அன்பழகன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துக்கொண்டர்.

மேலும் இதில் ஓவியர்கள் வசந்தன்,
மாணவன் தாயுமானவன், மெய்யப்பன் ஆகியோரின் ஓவியங்கள் காட்சிபடுத்தப்பட்டு மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

மேலும் கடந்த அக்டோபர் 31ஆம் தேதி முதல் எதிர்வரும் நவம்பர் 10 ஆம் தேதி வரை காலை 10.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை இந்த பாரம்பரிய ஒவிய கண்காட்சி மற்றும் விற்பனை கண்காட்சி காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

மேலும் இந்த கண்காட்சியில் தேசிய ஓவியர் வி. வசந்தன் அவர்கள் ஓவியர்களின் படைப்பு திறனுக்கு நன்றி கூறினார்.

முக்கிய நிகழ்வாக எதிர லருகின்ற 10ஆம் தேதி மாலை 5:30 மணி அளவில் ஓவியர்கள்
தாயுமானவன் மற்றும் வசந்தன் ஆகியோர்களின்
ஓவியம் வரைதல் நிகழ்வு பார்வையாளர்களின் முன்னிலையில் வண்ண அருவி ஆர்ட் கேலரியில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.