சென்னை:
டெல்லியில் நடைபெற்ற 9 வது தேசிய அளவிலான கட்கா விளையாட்டு போட்டியில் தமிழ்நாட்டின் சார்பாக சப் ஜூனியர் பிரிவில் சென்னை அண்ணாநகர் சிஎஸ்ஐ ஜெசி மோசஸ் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் படிக்கும் மாணவி எம். வர்ஷினி ஸ்ரீ , சென்னை அண்ணாநகர் ஸ்ரீ கிருஷ்ணசுவாமி மெட்ரிக்குலேஷன் பள்ளியில் படிக்கும் மாணவி எஸ். பாவனா ஆகியோர் வெள்ளி பதக்கத்தினையும், சென்னை அண்ணாநகர் சிஎஸ்ஐ ஜெசி மோசஸ் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் படிக்கும் மாணவி
இ. ஜூடித் தெரசா வெண்கல பதக்கத்தினை வென்றனர்.


(எம். வர்ஷினி ஸ்ரீ -வெள்ளி பதக்கம்)
(எஸ். பாவனா-வெள்ளி பதக்கம்)
வெற்றி பெற்ற மாணவியர்களுக்கு தமிழ்நாடு அமைச்சூர் கட்கா அமைப்பின் தலைவர் திருமதி சோலையம்மாள், செயலாளர் வி. பிரசாத் மற்றும் பயிற்சியாளர்கள் முத்துக்குமார் தீபா ஆகியோர் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
(இ. ஜூடித் தெரசா வெண்கல பதக்கம்)

