சென்னை:
அம்பத்தூர் கள்ளிகுப்பம் முத்தமிழ் நகர் பகுதி மக்களை அப்புறப்படுத்தியதை கண்டித்தும், அப்பகுதி மக்களுக்கு மாற்று இடம் அளித்திட வேண்டியும் தமிழக அரசை வலியுறுத்தி தமிழக முற்போக்கு மக்கள் கட்சி சார்பில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே அம்பத்தூர் ஜெயமுருகன் அவர்கள் தலைமையில் மக்கள் உரிமைக்கான ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த கண்டன ஆர்ப்பாட்டம் தமிழக முற்போக்கு மக்கள் கட்சி தலைவர் வழக்கறிஞர் க. சக்திவேல் அவர்கள் முன்னிலையில்
நடைப்பெற்றது.

மேலும் இதில் தேசிய முற்போக்கு மக்கள் சக்தி கட்சியின் தலைவர் வழக்கறிஞர் எம். எல்.ரவி,காந்தி மக்கள் இயக்கம் தலைவர் வழக்கறிஞர் சிவஞானசம்பந்தம், தமிழக முற்போக்கு கட்சி மாநில செயலாளர்கள் வழக்கறிஞர் பிரபாகரன் மற்றும் வழக்கறிஞர் சோபன் பாபு, தமிழக முற்போக்கு மக்கள் கட்சியின் மகளிர் அணி செயலாளர் காஞ்சனா தேசிய மக்கள் சக்தி கட்சி தலைமை நிலைய செயலாளர் தனசேகரன், ஜனநாயக மகளிர் கட்சி தலைவர் அம்மு ஆறுமுகம்,
காந்தியவாதி சசிபெருமாள் மது ஒழிப்பு போராளி ஒருங்கிணைப்பாளர் சுந்தர் மற்றும் முத்தமிழ் நகர் ஆறுமுகம்,
முத்தமிழ்நகர் ரமேஷ் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தமிழக முற்போக்கு மக்கள் கட்சி தலைவர் க. சக்திவேல் மற்றும் தேசிய முற்போக்கு மக்கள் சக்தி தலைவர் எம்.எல் ரவி ஆகியோர் இணைந்து செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:


அம்பத்தூர், கள்ளிகுப்பம் முத்தமிழ் நகர் பகுதியை சேர்ந்த மக்களை அப்பகுதியில் இருந்து அப்புற படுத்தியது பெரிதும் கண்டிக்கத்தக்கதாகும். எனவே தமிழக அரசு நீண்ட காலமாக இப்பகுதியில் வாழ்ந்து கொண்டிருக்கும் பகுதி மக்களுக்கு மாற்று இடம் அமைத்து தர வேண்டுமென தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்தனர்.

தொடர்ந்து காலம் தாழ்த்தும் பட்சத்தில் எங்களுடைய போராட்டம் தீவிரப் படுத்தப்படும் எனவும் தெரிவித்தனர்.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் முத்தமிழ் பகுதி மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.