சென்னை:
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் சமூக நீதியை உறுதி செய்வது குறித்து விவாதிக்க MHAA இன் அசாதாரண பொதுக்குழு கூட்டம் MHAA நூலக வளாகத்தில் நடைப்பெற்றது இரண்டு மணிநேரமாக நடைப்பெற்ற இந்த பொதுக்குழு கூட்டத்தில் உரிய விவாதங்களுக்குப் பிறகு எதிர் வருகின்ற 07.03.2025 அன்று மதியம் 1.30 மணிக்கு ஆவின் நுழைவாயில் அருகில் MHAA ஒருங்கிணைப்பில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.

மேலும் அனைத்து வழக்கறிஞர் சங்கங்களையும் ஒருங்கிணைத்து பிரச்சினைகளை முன்னோக்கி கொண்டு செல்லவும், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி,மற்றும் கொலீஜிய நீதிபதிகள்,உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் கொலீஜிய நீதிபதிகளை சந்திக்கவும் தீர்மானிக்கப்பட்டது.
மேலும் இதில் எஸ்சி, எஸ்டி, பி.சி மற்றும் சிறுபான்மை சமூகங்கள் மற்றும் பெண்களுக்கு நியாயமான பிரதிநிதித்துவத்தை உறுதி செய்தல் .ஒரு நாள் அடையாள நீதிமன்ற புறக்கணிப்பு செய்திடவும் முடிவு செய்யப்பட்டது.

இந்த பொதுக்குழு கூட்டத்தில் அணைத்து வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் , மூத்த வழக்கறிஞர்கள், இளம் வழக்கறிஞர்கள், பெண் வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் மற்றும் பெண் வழக்கறிஞர்கள்
கலந்துகொண்டனர்.
