நாமக்கல்:
அணைக்கும் கரங்கள் மறுவாழ்வு மையத்தில் தமிழ்ப்புலிகள் கட்சி நிர்வாகி முனைவர் குமரவேல் அவர்களின் புதல்வர் பிறந்த நாளை முன்னிட்டு எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் வட்டத்தில் அமைந்துள்ள ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் முதியோர்கள், மனநலம் பாதிக்கப்பட்ட நபர்களை பேணிக்காத்து சுமார் 180 க்கும் மேற்பட்ட நபர்களையும் சீர்படுத்தி, பராமரித்து வரக்கூடிய
அணைக்கும் கரங்கள் மறுவாழ்வு மையத்தில் தமிழ்ப்புலிகள் கட்சியின் நாமக்கல் மத்திய மாவட்ட செயலாளரும் வழக்கறிஞருமான முனைவர் குமரவேல் மற்றும் புவனேஸ்வரி தம்பதியர் புதல்வர் யஷ்வின் அவர்களின் 7 வது ஆண்டு அகவைதின நன்னாளில் ஆறு ஆண்டுகளாக தொடர்ந்து ஆதரவற்றவர்களுக்கு பசியாற்றும் நோக்கில் அத்தியாவசிய தேவையான அரிசி தொகுப்பு வழங்கப்பட்டது.

மேலும் கேக் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டு சிறப்பித்தனர்.
