வேலூர்:
வேலூர் மாவட்ட- மாநகர தலைமை ரஜினி ரசிகர் மன்றத்தின் சார்பில் வேலூர்:உலக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் 74வது பிறந்த நாளை முன்னிட்டு மற்றும் அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி முன்னாள் தலைவர் வா. நசுருதீன் அவர்கள் தலைமையிலும்,மாவட்ட பொறுப்பாளர் ஏ வி.அக்பர் பாஷா மற்றும் ஜி.ரஜினி ராஜ்குமார் ஆகியோர் ஏற்பாட்டிலும் வேலூர் பழைய பேருந்து நிலையம் அருகில் மும்மத வழிப்பாட்டிற்கு பின்பு,கொட்டும் மழையிலும் சிறப்புற நடைப்பெற்றது.

இந்நிகழ்வில் மருத்துவ சேவகர் டாக்டர்.பிரகாஷ் ஐயப்பன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு ஏழை, எளிய மக்களுக்கு அறுசுவை பிரியாணி,இனிப்புகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

மேலும் இந்நிகழ்வில் மன்ற நிர்வாகிகள் குப்பா,அப்பாஸ், சந்திரன், விஜயரங்கன். ரஜினி ஆனந்தன், ராஜா மற்றும் கிளை நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்ட னர்.