ஆத்தூர்:
சேலம் மாவட்டம் ஆத்தூரில் வருவாய்த்துறையினரின் சட்டவிரோத செயல்களை கண்டித்து மக்கள் உரிமை நுகர்வோர் பாதுகாப்பு மையம் சார்பில் ஆத்தூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு முல்லை ஆர். துரைராஜ் அவர்கள் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் நிறுவன பொதுச்செயலாளர். மனித நேயர் முனைவர் நா.சு செல்வராஜ், மாநில துணை பொதுச்செயலாளர் எஸ். கல்யாண சுந்தரம் ஆகியோர் கலந்துக்கொண்டு கண்டன உரையாற்றினர். ஆர். இளமதி அவர்கள் நன்றியுரை ஆற்றினார்.