சின்சியர் எய்ட் அறக்கட்டளை சார்பில் கண் குறைபாடுள்ள மாணவர்களுக்கு மொபிலிட்டி எய்ட் கைத்தடி வழங்கும் நிகழ்வு!

வில்லிவாக்கம்:
சின்சியர் எய்ட் அறக்கட்டளை பார்வையற்ற 200 மாணவர்களுக்கு மொபிலிட்டி எய்ட் கைத்தடியை வழங்கும் நிகழ்ச்சி வில்லிவாக்கத்தில் நடைப்பெற்றது.

வில்லிவாக்கத்தில் அமைந்துள்ள சின்சியர் எய்ட் அறக்கட்டளை தொண்டு நிறுவனம், சென்னையில் உள்ள பார்வையற்ற 200 மாணவர்களுக்கு மொபிலிட்டி எய்ட் கைத்தடியை நன்கொடையாக வழங்கியது .

இந்த கைத்தடியை மொபிலிட்டி எய்ட் என்றும் குறிப்பிடப்படுகின்றன,

பார்வை குறைபாடுகள் உள்ள நபர்களுக்கு முக்கிய கருவியாக செயல்படுவதால் இந்த கைத்தடியை, மொபிலிட்டி எய்ட் என்று குறிப்பிடப்படுகிறது.

சின்சியர் எய்ட் அறக்கட்டளை ( Sincere Aid Foundation – SAF ) யின் தலைவர் உஸ்னா ஃபாத்திமா சலீம் மற்றும் பொருளாளர் ஷீரின் ஃபர்சானா ஆகியோர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

சின்சியர் எய்ட் அறக்கட்டளை
தேவைப்படுபவர்களின் குறிப்பறிந்து வாழ்க்கையில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதற்கான உதவிகளை செய்து வருகிறது.
. இந்த வகையில் மொபிலிட்டி எய்ட் என்னும் கைத்தடியை பார்வையற்றவர்களுக்கு வழங்குவதை பெருமையாக கருதுகிறது.

பார்வை குறைபாடுகள் உள்ள மாணவர்களுக்கு கைத்தடி தன்னம்பிக்கையூட்டும் முக்கிய கருவிகளாக செயல்படுவதுடன் அவர்களின் அன்றாட நடவடிக்கைகள் மற்றும் கல்வி நோக்கங்களில் அது மிகவும் உதவிகரமாக விளங்குகிறது.

இந்த கைத்தடிகளை வழங்குவதன் மூலம் பார்வையற்ற மாணவர்களுக்கு புதிய வாய்ப்புகளை கண்டறியவும், அவர்கள் கல்வியில் தீவிரமாக ஈடுபடவும், பல்வேறு சமூக நடவடிக்கைகளில் பங்கேற்கவும், இறுதியில் அவர்களின் ஒட்டுமொத்த நல்வாழ்வு மற்றும் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துகிறது என்று தெரிவித்தனர்.