தென் சென்னை
வடக்கு கிழக்கு மாவட்டம்
ஆயிரம் விளக்கு தெற்கு பகுதி கழகத்தின்(ஓபிஎஸ் அணி) சார்பில் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் அவர்களின் திருவுருவ சிலைக்கு புகழ் மரியாதை!
நந்தனம்:
தேசத்தையும் தெய்வீகத்தையும் தன் இருகண்களாக கொண்டு மூடர் கூடத்தை ஒழித்து ஆன்மீக சிந்தனையை பகுத்தறிவு வழியில், பூமியில் கால் ஊன்ற செய்த பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் அவர்களின் 116 வது தேவர் ஜெயந்தி மற்றும்
61வது குருபூஜையை முன்னிட்டு
தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர்
ஓபிஎஸ் அவர்களின் வழிகாட்டுதலின் பேரில்
தென் சென்னை வடக்கு கிழக்கு மாவட்டம்
ஆயிரம் விளக்கு தெற்கு பகுதி கழகத்தின் சார்பில்
ஆயிரம் விளக்கு பகுதி கழக செயலாளர்
போயஸ் கார்டன்
கே.பி.கேசவன் அவர்கள்
தலைமையில்
சென்னை நந்தனத்தில் உள்ள
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்தும், மலர் தூவியும் புகழ் மரியாதை செலுத்தப்பட்டது.

அப்போது மாவட்ட பாசறை செயலாளர்
சதீஷ்,வட்ட கழக செயலாளர்
மணிகண்டன்,பாசறை மாவட்ட துணைச் செயலாளர் பாலாஜி,
பகுதி இளைஞர் அணி செயலாளர் ராகேஷ்,
கழக மகளிரணி நிர்வாகி
மஞ்சுளா உள்ளிட்ட கழக நிர்வாகிகள் மற்றும்
கழக உடன்பிறப்புகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
