கொளத்தூர்:தமிழ்நாடு ஆவின் ஓய்வுபெற்ற ஊழியர்கள் நல சங்கத்தின் கோரிக்கை விளக்க கூட்டம் கொளத்தூர் தாமரை குளம் பூங்கா அருகில் இச்சங்கத்தின் தலைவர் கே. கனகராஜ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இதில் பால்வளத்துறை அமைச்சர் மற்றும் நிர்வாக இயக்குநர் சந்திப்பு மூலம் சங்கத்தின் தொடர் முயற்சியும் அதன்பயனாக இந்த மாதம் ஊதிய உயர்வு( 500) அதற்கான நிலுவை தொகை(355)யும் ஓய்வூதியத்தில் சேர்த்து வழங்கபட்டதையும் மேலும் குடும்ப நல திட்ட நிதிக்காக 2மாத தொகையாக 300(150+150) பிடித்தம் செய்திருப்பது குறித்தும் விளக்கமாக எடுத்துரைக்கப்பட்டது. EL விடுப்பு சம்பளம் குறித்து அமைச்சர் மற்றும் நிர்வாக இயக்குநர் உறுதியளித்தது போல் தவணை முறையில் பெற்று கொள்ளலாம் என்று அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

மேலும் இதுகுறித்து சங்கத்தின் சார்பில் மீண்டும் அமைச்சர் மற்றும் நிர்வாக இயக்குநரை சந்தித்து ஆவன செய்வதென்று தீர்மானிக்கப்பட்டது. சங்கம் திறம்பட செயல்படவும் நிலுவையிலுள்ள கோரிக்கைகளையும் வென்றெடுக்க அனைவரும் ஒத்துழைப்பு நல்கிட உறுதியேற்கபட்டது.
இக்கூட்டத்தில் தலைவர் கே. கனகராஜ். பொதுச்செயலாளர் மு. வ. அய்யப்பன் ஆகியோர் விளக்க உரையாற்றினார்கள். மற்றும் தோழர் V. முத்துவேல், தோழர் கணேசன், தோழர் விஜயகுமார், ஆகியோர் சிறப்பு ரையாற்றினார்கள்.
