தி. நகரில் யூரோ கிட்ஸ் குழந்தைகள் பள்ளி
பிரமாண்ட திறப்பு விழா!

தி.நகர்:யூரோ கிட்ஸ் குழந்தைகள் பள்ளி
பிரமாண்ட திறப்பு விழா தி. நகர் பார்த்தசாரதிபுரத்தில் நடைப்பெற்றது. இந்நிகழ்வில்
மாண்புமிகு நீதியரசர் முனைவர் டி.என். வள்ளிநாயகம் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

மேலும் இந்நிகழ்வில் யூரோ கிட்ஸ் நிறுவனத்தின் வணிக மேலாளர் ராம்குமார் முருகேசன் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

வஜ்ரவேலு சிவாஜி ராவ், விஜயகுமாரி, சுகந்தி,சிவானி ஆகியோர் குத்து விளக்கேற்றி னர்.

ரேகா தினேஷ் மற்றும் தினேஷ் ஆகியோர் திறப்பு விழா ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர்.

மேலும் இந்நிகழ்வில் ஆசிரிய பெருமக்கள், நண்பர்கள், உறவினர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

குழந்தைகள் சேர்கைக்கு அழைக்கவும்:
EuroKids@T.Nagar 98840-40930 tnagareurokids@gmail.com