புளியந்தோப்பு ஆசிர்வாதபுரத்தில் வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை சிற்றாலயம் திறப்பு மற்றும் தேர்பவனி விழா நிகழ்வு!

சென்னை: புளியந்தோப்பிலுள்ள
ஆசீர்வாதபுரம் முதல் தெருவில் அமைந்துள்ள வேளாங்கண்ணி
ஆரோக்கிய அன்னை சிற்றாலய திறப்பு விழா மற்றும் தேர்பவனி விழா பூங்கா நகர் பிரான்சிஸ் அவர்களின் ஏற்பாட்டில் வெகு சிறப்பாக நடைப்பெற்றது.

இந்நிகழ்வில் அருட்பணியாளர்களான Rev.Fr.வர்கீஸ் v.c, இயக்குனர் – தியான மையம் – ஏலாவூர்,
Rev.Fr.ஜோ ஆண்ட்ரூ V.C.,
புனித அந்தரியார் ஆலய பங்குதந்தை, சூளை, Rev.Fr.அல்போன்ஸ் அருளானந்தம் SDB., இல்ல தந்தை – தொன் போஸ்கோ – பேசின் பாலம் – சென்னை,
Rev.Fr.ஜாய் சூரியன்-
பங்குத்தந்தை – சகாய அன்னை ஆலயம் – பேசின் பாலம், Rev.Fr.K.C.அந்தோணி SDB-ஆன்ம குரு – தொன் போஸ்கோ – பேசின் பாலம், Rev.Fr.டேவிட் ஜோப் SDB., உதவி பங்குதந்தை – சகாய அன்னை ஆலயம் – பேசின் பாலம்,Rev.Fr. ஜெரோம் சிரில் SDB -சகாய அன்னை ஆலயம் பேசின் பாலம், Rev.Fr.சகாயராஜ் CME ஆகியோர் கலந்துக்கொண்டு சிற்றாலத்தை திறந்து வைத்து ஆசிர்வதித்தனர்.

இந்த திறப்பு விழாவை முன்னிட்டு பொதுமக்களுக்கு அறுசுவை வழங்கப்பட்டது.

மேலும் இந்நிகழ்வில் கே. பிரான்சிஸ் அவர்களின் குடும்பத்தினர், நண்பர்கள்,
பொதுமக்கள் மற்றும் அனைத்து மாநகராட்சி, நகராட்சி அண்ணா பொது ஊழியர்கள் சங்க நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர்.