சென்னை :உலக முழுவதும் 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா பாதிப்பால் மக்கள் மிகுந்த இன்னல்களையும், அச்சத்தையும் அடைந்துள்ள நிலையில், பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறக்கப்பிக்கப்பட்டு அமலில் உள்ளது. இதனால் வீடுகளிலேயே மக்கள் முடங்கி கிடக்கின்றனர். கோயில்கள், தேவலாயங்கள், பள்ளிவாசல்கள் மூடப்பட்டு, பல பண்டிகைகளை மக்கள் தங்கள் வீடுகளிலேயே கொண்டாட வேண்டிய இன்னலுக்கு தற்போது தள்ளப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் பொருட்டு கடந்த மாதம் 24-ம் தேதி முதல் ஏப்ரல் 14-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று காலை பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரை நிகழ்த்துகையில், மே 3-ம் தேதி வரை மேலும் 18 நாட்கள் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுவதாக தெரிவித்திருந்தார்.
தற்போது ஊரடங்கு உத்தரவு காரணமாக நாடு முழுவதும் கோவில்கள், தேவாலயங்கள், பள்ளிவாசல்கள் ஆகியவை மூடப்பட்டுள்ளது.
ரமலான் மாதத்தின் 30 நாட்களும் இஸ்லாமியர்கள் நோன்பு கடைபிடித்து பள்ளிவாசல்களில் கஞ்சி அருந்தி நோன்பை நிறைவு செய்வது வழக்கம். வரும் 25-ம் தேதி முதல் ரமலான் நோன்பு தொடங்கவுள்ளது. தற்போது பள்ளிவாசல்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால், இஸ்லாமியர்களுக்கு நோன்பு கஞ்சி எப்படி கிடைக்கும் என கவலையில் உள்ளனர்.

ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க பள்ளிவாசல்களுக்கு அரிசி வழங்க தேவையான அனுமதியை கடந்த 2001-ம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா வழங்கினார். அதன்படி, பள்ளிவாசல்களுக்கு தேவையான அரிசி வழங்கப்பட்டு வருகிறது. ஊரடங்கு உத்தரவில் ஏப்ரல் 20-ம் தேதி முதல் சில தளர்வுகளை மத்திய அரசுஅறிவித்துள்ளது. வழிபாட்டு தலங்கள் மூடப்பட்டிருக்கும் என அறிவித்திருப்பதை ஏற்கும் அதே நேரத்தில் சமூக விலகலுடன் பள்ளிவாசல்களில் நோன்பு கஞ்சி தயாரித்து. சமூக இடை வெளியுடன் அதனை மக்களுக்கு வழங்க தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டும் என தமிழ்நாடு முஸ்லிம் லீக் சார்பில் கேட்டுக் கொள்ளபடுகிறது
2001-ம் ஆண்டு முதல் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்து பள்ளிவாசல்களுக்கு நோன்பு கஞ்சி தயாரிக்க அரிசி வழங்கி வந்தார். அந்த வகையில் வரும் 25-ம் தேதி ரமலான் மாத நோன்பு தொடங்கவுள்ளதால் இந்த ஆண்டும் இந்த ஆண்டு நோன்பு தொடங்கும் முன்னரே அரிசி வழங்குமாறு இஸ்லாமிய மக்களின் சார்பிலும் தமிழக அரசை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன். இதை ஏற்று உடனடியாக பள்ளிவாசல்களுக்கு அரிசி ஒதுக்கி செய்து தமிழக முதல்வர் ஆணையிட வேண்டும் என வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன் என்று வி.எம்.எஸ்.முஸ்தபா கேட்டுக் கொண்டார்.
