காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியம் நடுவீரப்பட்டு பகுதியில் இயங்கி வரும் சோஷியல் புரோடக்ஷன் அமைப்பினை சேர்ந்தவர் ஜோசப் இளந்தென்றல் என்பவர் அவரது குடும்பத்தினர் மற்றும் தன்னார்வ அமைப்பின் நிர்வாகிகள் கார்த்திக்குமார், சீனிவாசன், விஜய், சாலமோன், சஞ்சய் இலக்கியா, பூஜா, கௌசல்யா, ஸ்டெல்லா மேரி , அன்சாரி, ஆகியோரின் ஒத்துழைப்போடு ஊரடங்கால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு கடந்த 10 நாட்களாக 200 நபர்களுக்கு அத்தியாவசிய உணவு பொருட்களை வழங்கி வருகிறார்.

மேலும் அவரிடம் பேசியபோது, அவர் ஒரு மனித உரிமை ஆர்வலர் என்றும், சோஷியல் புரோடக்ஷன் அமைப்பின் தலைவர் என்றும் தெரிய வந்தது. 2020 குடும்பங்களுக்கு அத்தியாவசிய தேவைக்கு உதவி அவர்களது பொருளாதார நெருக்கடியை சரிசெய்ய வேண்டும் என்பதே இவரது நோக்கமாகும். அதேபோல பறவைகளுக்கும் தொடர்ந்து உணவு வழங்கபோவதாகவும் தெரிவித்தார்.

இந்த பணியோடு சேர்த்து சமூக விழிப்புணர்வும் வழங்கி வருகிறார் . கடந்த 19 ஆண்டுகளாக சமூக அக்கறையுடன் உதவும் பணியிலும், ஊக்குவிப்பு பணியிலும் ஈடுபட்டு வரும் இவர் இதுவரை 3000 மேற்பட்ட சமூக ஆர்வலர்கள், சாதனையாளர்களை ஊக்குவித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது….
தொடர்பு எண்: 89 39 44 88 77
