சென்னை ஜமீன் பல்லாவரம் பகுதியை சேர்ந்தவர் குட்டிமா,இவரின் கணவர் பெயர் சந்தோசம் இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தவறிவிட்டார்.இந்த இக்கட்டான சூழ்நிலையில் பல்லாவரம் தொகுதிக்குட்பட்ட மலகானந்தபுரம் மயானத்தில் ஒரு இரும்பு பெண்மணியாக இவர் கடந்த பதினைந்து வருடங்களாக சடலங்களை புதைக்கும் பணியைச் செய்வதோடு மட்டுமல்லாமல் ஆதரவற்ற சடலங்களையும் தனி ஆளாக நின்று நிறைய சவால்களை ஏதிர்கொண்டு தனது களப்பணியைத் தொடர்ந்து செய்து கொண்டு இருக்கிறார்.
இவர் தனது கணவரின் இறப்புக்கு பின் ஒரு பெண் மிகுந்த மன தைரியத்தோடு தனது கணவர் பார்த்து வந்த வெட்டியான் வேலையைத் தொடர்ந்து செய்து வருவதோடு மட்டுமல்லாமல்
உறவுகள் அறக்கட்டளையின் மூலம் கொண்டு வரப்படும் ஆதரவற்ற சடலங்களுக்கும் எந்த வித பலனும் எதிர்பார்க்காமல் காவல் துறையினரின் முழு ஒத்துழைப்புடன் இதுவரை 1000-க்கும் மேற்பட்ட ஆதரவற்ற சடலங்களை உறவுகள் அறக்கட்டளையின் உதவியோடு அடக்கம் செய்து வருகிறார்.
மேலும் எவரும் செய்ய தயங்கும் வெட்டியான் பணியை அர்பணிப்புடன், சமூக தொண்டாக ஆற்றிக் கொண்டிருக்கும் இந்த விதவை பெண்மணியாகிய குட்டிமா.அவர்கள் வாழ்வாதாரம் இன்றி தவித்து வருகிறார்.
மேலும் தமிழக அரசிடமிருந்து எந்த ஒரு சலுகைகள் கிடைக்காத நிலையில்,மேலும் தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் அவர்கள் இவரின் சமூக தொண்டுக்கு
அரசு பணி வழங்கிடுவாரா?
பொருத்திருந்து பார்போம்…..



