யுனானி மருத்துவர் எம்.ரசூல் அவர்கள் நோய் தடுப்புத் துறையில் ( immunology department) ப‌ல்வேறு ஆராய்ச்சிகளை செய்து வரும் ஆராய்ச்சியாளர் ஆவார். அவர் யுனானி மருந்துகளான மாஜுன் உஷ்பா, மாஜுன் சோப்சீனீ அகிய மருந்துகளை ஆராய்ச்சி செய்து முடக்கு வாதம் (Rheumatoid arthritis) என்ற நோய்க்கு பலனளிபத்தாக அறிவியல் பூர்வமாக நிருபித்துள்ளார்

இவருடைய ஆய்வுக்கட்டுரையை சிறந்த ஆய்வுக்கட்டுரையாக தேர்ந்தெடுத்து மத்திய அரசு விருது வழங்கியுள்ளது. . இவருடைய சாதனையை பாராட்டி கவுரவிக்கும் வகையில்
தமிழ்நாடு யுனானி மருத்துவச் சங்கத்தின் சார்பாக சென்னை ராயபுரத்தில் உள்ள யுனானி மருத்துவ ஆராய்ச்சி மையத்தில் டாக்டர்.எம்.ரசூல் . PhD, FRBS அவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு யுனானி மருத்துவ சங்க தலைவர் டாக்டர். ஜே. இர்ஷாத் தலைமை தாங்கினார். பொதுசெயலாளர் டாக்டர். சையது முகம்மது ஜாபர் வரவேற்றார்.

சென்னை யுனானி ஆராய்ச்சி நிலைய துணை இயக்குநர் டாக்டர். ஜஹீர் அஹமது,
அரசு யுனானி மருத்துவக் கல்லூரி முன்னாள் முதல்வர் டாக்டர். இமாமுதீன் அஹமது, ஸஹத் ஃபார்மா இயக்குநர் டாக்டர் தலத் சலீம் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.

மேலும் முடக்குவாத நோய்க்கு சிறந்த நிவாரணமாக உள்ள மாஜூன் உஷ்பா , மாஜூன் சோப்சீனீ அகிய மருந்துகளை அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் முடக்கு வாத நோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பயன்படுத்து புகுந்த நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசிற்கு கோரிக்கை வைத்தனர்..