கோயம்பேடு:
சென்னை பர்வீன் டிராவல்ஸ் பேருந்துகளில் காற்றை தூய்மைப்படுத்தும் அதிநவீன கருவியான UV 222 என்ற கருவியை முன்னாள் குடியரசு தலைவர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் அவர்களின் அறிவியல் ஆலோசகரும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பின் முன்னாள் அதிகாரியுமான வெ.பொன்ராஜ் அவர்கள்அறிமுகப்படுத்தினார்.
கொரோனா, ஒமிக்ரான் போன்ற காற்றில் பரவும் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த காற்றை தூய்மைப்படுத்தும் UV 222 எனப்படும் அதிநவீன கருவியை மக்கள் கூடும் இடங்களில் பொருத்த வேண்டும் என பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பின் முன்னாள் அதிகாரி பொன் ராஜ் வலியுறுத்தினார்
மேலும் இந்தியாவில் முதல் முறையாக மக்கள் செல்லும் பேருந்துகளில் இது போன்ற கருவி அறிமுகப்படுத்துவதாகவும், விரைவில் ரயில் போக்குவரத்து, அனைத்து அரசு பேருந்துகள், திரையரங்க வளாகங்கள் போன்ற மக்கள் கூடும் இடங்களிலும் இதுபோன்ற கருவியைப் பொருத்தினால் காற்றில் பரவும் வைரஸ்களை முழுமையாக கட்டுப்படுத்த முடியும் என அவர் கூறினார்.
மேலும் இந்த அறிமுக நிகழ்வில் ஆம் ஆத்மி கட்சியின் தமிழக ஒருங்கிணைப்பாளர் எஸ்.ஏ.என்.வசீகரன் மற்றும் பர்வீன் டிராவல்ஸ் முதன்மை மேலாண்மை இயக்குனர் அப்சல் ஆகியோர் கலந்துக்கொண்டனர்…

