சென்னை :தமிழ்நாடு இயல் இசை நாடக உறுப்பினர் செயலாளராக நியமிக்கப்பட்ட காழ்ப்புணர்ச்சியின் காரணமாக பொய் குற்றசாட்டுகளால் மாற்றப்பட்ட தேசிய சங்கீத நாடக அகாடமியின் விருது பெற்ற கிராபிய கலைஞரான முனைவர் சோமசுந்தரம் அவர்களை தமிழ்நாடு இயல் இசை நாடக மன்ற உறுப்பினர் செயலாளராக மீண்டும் நியமிக்க வலியுறுத்தி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அனைத்து கிராமியக் கலைஞர்கள் பாரம்பரிய கிராமிய கலைகளான கரகாட்டம், கோலாட்டம் மூலம் மேள தாளங்கள் முழங்க ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்…
இந்த கண்டன ஆர்பாட்டத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த 200ற்கும் மேற்பட்ட கிராமிய கலைஞர்கள் நாதஸ்வரம், மேளதாளங்கள் முழங்க தப்பாட்டம், கரகாட்டம், கோலாட்டம் ஆடியும், கண்டன முழக்கங்கள் எழுப்பியும் தமிழக முதல்வருக்கு தங்களின் வேண்டுகோளினை முன்வைத்தனர்…
மேலும் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தில் இயல்.இசை. நாடகம் , நாட்டியம், திரைப்படம் போன்ற துறைகளுக்கு தமிழக அரசு வழங்கி வந்த அங்கீகாரத்தை கிராமிய கலைஞர்களுக்கும் தொடர்ந்து வழங்கிட வேண்டும் என தங்களது கண்டன ஆர்ப்பாட்ட்ததின் வாயிலாக கோரிக்கை வைத்தனர்..
