திருவள்ளூர் :கடந்த சனிக்கிழமை 27.6.2020 அன்று பெண்களின் கையைப் பிடித்து இழுத்த
3 போதை இளைஞர்களை கைது செய்யாமல் காவல் துறையினர் மவுனம் காப்பது ஏன் என பொதுமக்களின் கேள்வி?
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகில் பூனிமாங்காடு பஞ்சாயத்துக்குட்பட்ட வெங்கடாபுரம் கிராமத்தில் சாலையில் நடந்து சென்ற பெண்ணை 3 போதை இளைஞர்கள் அந்த பெண்ணின் கையை பிடித்து இழுத்து உள்ளனர்.
ஆந்திர எல்லையான சித்தூர் மாவட்டம் நகரி அருகில் ஓஜிகுப்பம் என்கிற கிராமத்தில் கஞ்சா விற்பனை படுஜோராக நடைபெற்று வருகிறது.
திருத்தணியில் இருந்து 3 இளைஞர்கள் இரு சக்கர வாகனத்தில் வெங்கடாபுரம் வழியாகச் சென்று கஞ்சாவை வாங்கிக்கொண்டு திரும்பி வரும்பொழுது நடந்து சென்ற பெண்ணை கையை பிடித்து இழுத்து தவறாக நடக்க முயன்றுள்ளனர்.
அந்தப் பெண்ணை கையை பிடித்தவுடன் அப்பெண் கத்தி கூச்சலிட்டு அருகில் உள்ளவர்களை அழைத்துள்ளார்.
அப்பகுதியிலுள்ள பொதுமக்களை அழைத்தவுடன் மூன்று இளைஞர்களும் அங்கு இருந்து தப்பிச் செல்ல முயன்றுள்ளனர். அப்போது கிராமத்தின் உள்ளே வரும் போது பொதுமக்கள் மடக்கிப் பிடித்துள்ளனர்.
மூன்று இளைஞர்களையும் பிடித்து கிராம மக்கள் விசாரித்துள்ளனர்.
பெண்ணிடம் மன்னிப்பு கேட்டதால் கிராமத்தில் உள்ளவர்கள் மன்னித்து விட்டனர். இதுபோன்ற தினமும் இருசக்கர வாகனத்தில் தமிழ்நாடு எல்லையான வெங்கடாபுரம் கிராமத்தின் வழியாக மது மற்றும் கஞ்சா வாங்குவதற்காக ஆந்திராவுக்கு அதிகமாக இருசக்கர வாகனத்தில் சென்று வருகின்றனர்.
கனகம்மாசத்திரம் காவல் நிலையத்திற்கு பலமுறை பிரச்சினைகள் குறித்து தகவல் கொடுத்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
கொரோனா வைரஸ் தாக்கம் அதிகம் உள்ள சூழ்நிலையில் இது போன்ற இருசக்கர வாகனங்கள் கிராமத்தில் வருவது அதிகமாக உள்ளது இதனால் வைரஸ் தாக்கம் ஏற்பட 100% வாய்ப்புள்ளது.
இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று அக்கிராம மக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
இது போன்ற தவறுகள் நடக்காமல் இருக்க காவல் துறையினர் நடவடிக்கை எடுப்பார்களா? என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
கடந்த சனிக்கிழமையும் இதேபோல் பிரச்சினை நடைபெற்றது. மீண்டும் கஞ்சா அடிக்கும் போதை ஆசாமிகளால் கிராமத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. காவல் துறையினர் தகுந்த நடவடிக்கை எடுக்காத காரணத்தால் தமிழக அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
காவல் நிலையத்திற்கு புகார் அளித்தால் அதற்கான நடவடிக்கை எடுக்காமல் காவல் துறையினர் அவர்களிடம் லஞ்சம் வாங்கிக் கொண்டு அவர்களை விட்டுவிடுகின்றனர் என கிராம மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கனகம்மாசத்திரம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெறும் இந்த சம்பவத்தை கண்டு கொள்ளாத காவல்துறை மீது நடவடிக்கை எடுக்குமா? தமிழக அரசு என கிராம மக்கள் கேள்வி எழுப்புகின்றனர் .
ஒரு வாரத்துக்கு முன்பு இதேபோல் கஞ்சா போதையில் வந்து ஒரு பெண்ணை கை பிடித்து இழுத்தனர் காவல்துறைக்கு தகவல் கொடுத்தால் வந்து விசாரித்து அந்த மாணவனிடம் லஞ்சம் வாங்கிக்கொண்டு அந்த மாணவனை விட்டுவிட்டனர்
அதேபோல் வெங்கடாபுரம் கிராமத்தின் வழியாக பத்துக்கும் மேற்பட்ட போதை ஆசாமிகள் கஞ்சா வாங்குவதற்காக கிராமத்தையே பயன்படுத்துகின்றனர் கிராம மக்கள் கனகம்மாசத்திரம் காவல் நிலையத்திற்கு தொடர்பு கொண்டால் வருகிறோம் என்று சொல்லிவிட்டு காலையிலிருந்து எந்த காவல்துறையும் கிராமத்துக்கு வரவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளனர் ஆந்திர எல்லையான இந்த வெங்கடாபுரம் கிராமம் வழியாக இருசக்கர வாகனம் அதிகமாக சென்று கொண்டிருக்கின்றன
கொரானா தொற்றுநோய் பரவும் சூழ்நிலையில் இதுபோன்ற இருசக்கர வாகனங்களில் செல்வதால் வைரஸ் தாக்கம் 100% அதிகரிக்க வாய்ப்புள்ளது எனவே அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர் எப்பொழுதும் இரண்டு காவலர்களை கிராமத்திற்கு அனுப்பினால் நன்றாக இருக்கும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
