சென்னை : ஜூன், 02

சென்னை நுங்கம்பாக்கம், ஜோசியர் தெருவில் செயல்பட்டு வரும் பாலகிருஷ்ணன் பவுண்டேசன் சார்பில் கொரோனா தொடர் ஊரடங்கினால் வாழ்வாதாரம் பாதித்த மக்களுக்கு உதவும் வகையில் நிவாரணப்பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் பாலகிருஷ்ணன் பவுண்டேசன் டிரஸ்டி சுரேந்திரன்,தமிழ்நாடு வாகன ஓட்டுநர்கள் மற்றும் தொழிலாளர் சங்கத்தின் துணைத்தலைவர் மாதேஸ்வரன் ஆகியோர் அரிசி பை தொகுப்பினை பொதுமக்களுக்கு வழங்கினர்.

இதில் நூற்றுக்கும் மேற்பட்ட ஏழை, எளிய மக்கள் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியை முறையாக பின்பற்றி நிவாரண பொருட்களை பெற்றனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சென்னை பாலகிருஷ்ணன் பவுண்டேசன் டிரஸ்டி சுரேந்திரன் கூறுகையில், எங்களுடைய பாலகிருஷ்ணன் பவுண்டேசன் என்பது ஒரு பெரிய தொண்டு நிறுவனம் ஆகும். எங்களுடைய பவுண்டேசன் தலைவர் சுகுமார் பாலகிருஷ்ணன் அவர்களின் தந்தையின் பெயரால் துவங்கப்பட்ட இந்த அறக்கட்டளை சமுதாயத்தில் பல்வேறு வகையான உதவிகளை செய்து வருகிறது.புயல்,மழை,வெள்ளம் போன்ற பேரிடர் கால நிவாரண பணிகளையும், மருத்துவ உதவி,கல்வி உதவிகளையும் வழங்கி வருகிறோம்.

தற்போதைய கொரோனா பாதித்த ஊரடங்கு இக்கட்டான சூழலில் வாழ்வாதாரம் இழந்து தவித்து வரும் மக்களுக்கு உதவும் வகையில் மதுராந்தகம் தாலுகா,சம்பந்தி நல்லூர் விவசாய கிராமத்தை தத்தெடுத்து 70 விவசாய குடும்பத்தினருக்கு தலா ரூ.2ஆயிரம் மற்றும் இக்கிராமத்தில் உள்ள 22 முதியவர்களுக்கு தலா ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டது.தொடர்ந்து வேலூர் பகுதி மக்களுக்கும் நிவாரண உதவிகள் வழங்கியுள்ளோம்.

மேலும் சென்னையில் தற்போது நுங்கம்பாக்கம்,மயிலாப்பூர்,வியாசர்பாடி,பெரம்பூர்,கன்னிகாபுரம்,திரும்பெரும்புதூர்,திருவேற்காடு, பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களுக்கு உதவிகள் வழங்க உள்ளோம் என்றார்.

இந்நிகழ்வில் அலுவலக ஊழியர்கள் துரை,செந்தில் அருள் உள்ளிட்டோர் உறுதுணையாக இருந்தனர்.