நாமக்கல்:
புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு உட்பட்ட அரசு அலுவலகமான பஞ்சாயத்து நிகழ்ச்சியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத தமிழக வெற்றி கழகத்தினுடைய வடக்கு புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றிய செயலாளர் ராகவன் (தனிநபர்) தலைமையில் மக்களுடைய வரிப்பணத்தில் நிகழ்ச்சிகளை அரசு ஊழியர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.

இந்த நிகழ்ச்சியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத பிரதிநிதியான ஒன்றிய செயலாளர் ராகவன் என்பவர் மக்களுடைய வரிப் பணத்தில் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த அந்த நிகழ்வில் புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரிகள் பணி செய்யக்கூடிய தூய்மை பணியாளர்களுக்கு பொரி, சுண்டல் ஆகியவற்றை கொடுக்காமல் மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத பிரதிநிதியை நிகழ்ச்சிக்கு தலைமையேற்று தன்னுடைய சுய லாபத்திற்காக பொதுவெளியில் சுய விளம்பரம் செய்து கொள்ளும் உள்நோக்கத்தோடு அரசு அலுவலகங்களில் அரசு அலுவலக நிகழ்ச்சிகளில் மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத தனி நபர் (அதாவது அரசு ஊழியர் அல்லாத வெளி நபர்கள்) தலையீடு அல்லது அவர்களது தலைமையில் பணிகளை மேற்கொள்ளும் செயல்பாடு அதோடு ஒன்றியச் செயலாளர் ராகவன் அவரது பாக்கெட்டில் இருந்து வெளிப்படை தன்மையோடு பணத்தை தட்டில் கொடுக்கக்கூடிய இந்த அணுகுமுறை என்பது சட்டப்படி குற்றம் அதுமட்டுமில்லாமல் இச்சம்பவத்தை நாமக்கல் தொகுதி மாவட்ட தலைமை தமிழ்ப்புலிகள் கட்சி மிகவும் வன்மையாக கண்டனத்தை பதிவு செய்தது.

மேலும் கடந்த ஜூன் 2026 ல் நடைபெற்ற மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் கூட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் சென்னையில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் தனிநபர்களுடைய தலையீடு அரசு அலுவலகங்களில் இருக்கக் கூடாது ஆளும் கட்சியாக இருந்தாலும் அவர்கள் தலையிட மாட்டார்கள் தலையிடவும் கூடாது என்கின்ற உத்தரவை பிறப்பித்து பல்வேறு விதமான உத்தரவுகளை மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கும், மாவட்ட காவல் கண்காணிப்பு அலுவலர்களுக்கும் பிறப்பித்திருந்தார்.
