கொல்கத்தா:
சர்வதேச அளவில் பாராட்டைப் பெற்ற தமிழ் குறும்படமான “போர் பறவைகள்” (Por Paravaigal / War Birds), எழுதி இயக்கிய சுபாஷ் பாரதி அவர்கள் எழுதி இயக்கிய இந்த குறும்படத்திற்கு கொல்கத்தா சுவாமி விவேகானந்தா அரங்கில் நடைபெற்ற 7வது உலக சுயாட்சி திரைப்பட விழா (GIFFI Awards 2025)-இல் கௌரவிக்கப்பட்டது.
ஜெகன் மற்றும் ஷாந்தினி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்தக் குறும்படத்தில் ஏ.ஜே. ஹரிஹரன் அவர்கள் இலங்கை நீதிபதியாக நடித்துள்ளார். மனிதம், அடையாளம் மற்றும் நீதி ஆகியவற்றை எல்லைகளைக் கடந்து வெளிப்படுத்தும் இந்த படம், அகதிகளின் உணர்ச்சி நிறைந்த வாழ்க்கைப் போராட்டத்தையும் தங்கள் தாய்நாட்டுக்குத் திரும்பும் கனவையும் நெகிழ்ச்சியுடன் வெளிப்படுத்துகிறது.

மேலும இயக்குநர் சுபாஷ் wSபாரதி கூறியதாவது:
“போர் பறவைகள்” குறும்படம் மூலம் உலகம் முழுவதும் உள்ள 15 கோடி அகதிகள் தங்கள் தாய்நாட்டிற்குத் திரும்ப வேண்டும் என்கிற அவர்களின் கனவினை உலக மக்களிடம் மீண்டும் நினைவூட்ட விரும்பினோம்.
பல வருடங்களாக இடம்பெயர்ந்த அகதிகள் அமைதியும் சொந்தம் எனும் உணர்வையும் தேடி செல்லும் உணர்ச்சி பயணத்தை இது பிரதிபலிக்கிறது.
ஹீரோ ஜெகன் அவர்கள் கூறியதாவது:
“இந்தக் கதை தேசிய எல்லைகளைத் தாண்டி மனிதாபிமானத்தைப் பேசுகிறது.
இது ஒரு திரைப்படம் மட்டுமல்ல உலகத்திற்கான கருணைச் செய்தி என்று தெரிவித்தார்.
முன்னணி நடிகரும், சமூக ஆர்வலருமான ஏ.ஜே. ஹரிஹரன் அவர்கள் கூறியதாவது:
“இந்தக் குறும்படம் ஒவ்வொருவரின் இதயத்தையும் தொடும் என நம்புகிறேன். இது முழுநீள திரைப்படமாக உருவாகி, உலகளாவிய பார்வையாளர்களை சென்றடையவும், அகதிகள் மறுவாழ்வு கொள்கைகளை மீளாய்வு செய்யவும் உதவ வேண்டும் என்பதே என்னுடைய நம்பிக்கை. எங்கள் தயாரிப்பாளர்கள் ரியல் கிங் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் திருமதி எம்.ஏ. மீனாட்சி மற்றும் திரு. சிங்கப்பூர் ஜெகன் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி. மேலும் எங்கள் படத்தை வெற்றி படமாக தேர்வு செய்த GIFFI Awardsக்கும், நீதிபதி குழுவுக்கும் என் இதயம் கனிந்த நன்றி என தெரிவித்தார்.
“போர் பறவைகள்” வெளியானதிலிருந்து அதன் ஆழமான கதை சொல்லல் மற்றும் சமூகச் செய்திக்காக பல்வேறு சர்வதேச பாராட்டுகளைப் பெற்றுள்ளது.
வெற்றிகள்:
- நோர்வே இன்டர்நேஷனல் தமிழ் திரைப்பட விழா – வெற்றி
- சென்னை இன்டர்நேஷனல் குறும்பட விழா – வெற்றி
- கான்ஸ் உலக திரைப்பட விழா (பிரான்ஸ்) – வெற்றி
- கனடிய தமிழ் இன்டர்நேஷனல் திரைப்பட விழா – சிறந்த படம்
- 19வது அயோத்தியா இன்டர்நேஷனல் திரைப்பட விழா – சிறந்த அறிமுக இயக்குநர்
- துபாய் இன்டர்நேஷனல் திரைப்பட விழா – சிறந்த படம் மற்றும் சிறந்த அறிமுக இயக்குநர்
- 14வது கொல்கத்தா குறும்பட விழா – சிறப்பு பாராட்டு
- 7வது GIFFI Awards 2025 – சிறந்த குறும்படம் (விருது பெறுவது 2025 நவம்பர் 15 அன்று)
தேர்ந்தெடுக்கப்பட்ட திரையிடல்கள்:
அமெரிக்கா (லாஸ் ஏஞ்சல்ஸ், நியூயார்க்), கொலம்பியா, ரஷ்யா மற்றும் இந்தியாவின் பல திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு, உணர்ச்சி மிகுந்த காட்சிப்படுத்தலுக்காக பாராட்டைப் பெற்றுள்ளது.
நிகழ்வைப் பற்றி:
7வது GIFFI Awards 2025 – உலக சுயாட்சி திரைப்படங்களின் சிறப்பை கொண்டாடும் விழா ஆகும். இவ்விழா நவம்பர் 15, 2025 அன்று மௌலாலி யுவா கேந்திரா, சுவாமி விவேகானந்தா அரங்கில் (கொல்கத்தா) நடைபெற்றது.

இயக்குநர் சுபாஷ் பாரதி மற்றும் முன்னணி நடிகர் ஏ.ஜே. ஹரிஹரன் “போர் பறவைகள்” திரைப்படத்தை பிரதிநிதித்துவப்படுத்துவார்கள்.
திரைப்பட விவரங்கள்:
தலைப்பு: போர் பறவைகள் (Por Paravaigal / War Birds)
எழுதி இயக்கியவர்: சுபாஷ் பாரதி
ஹீரோ: ஜெகன்
ஹீரோயின்: ஷாந்தினி
முக்கிய கதாபாத்திரம் (நீதிபதி): ஏ.ஜே. ஹரிஹரன்:
98401 88821,86101 55727
சுபாஷ் பாரதி
இயக்குநர்
செல்:81482 14410
இமெயில்:subeshbarathi@gmail.com)
