சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மெகா தொலைக்காட்சி சார்பில்
சிறந்த சமூக சேவைக்காக மெகா மகளிர் விருது மற்றும் வாழ்நாள் சாதனை யாளருக்கான மெகா விருது பெற்ற டாக்டர்.நந்தினி ஆசாத்

தேனாம்பேட்டை :
சர்வதேச மகளிர் தினத்தை சிறப்பிக்கும் வகையில்
மெகா தொலைக்காட்சி நிறுவனம் சார்பில் ஆண்டு தோறும் பல்வேறு துறைகளில் சாதனை படைத்த பெண் சமுதாயத்துக்கு முன்னுதாரணமாக உள்ள சாதனை பெண்மணிகளை ஊக்கப்படுத்தி கவுரவிக்கும் நோக்கில் 12-வது மெகா மகளிர் விருது வழங்கும் விழா
சென்னை காமராஜர் அரங்கத்தில் நடைபெற்றது.

இந்த விழாவில் சர்வதேச அளவில் புகழ்பெற்ற பிரபல சமூக சேவகி டாக்டர்.நந்தினி ஆசாத்துக்கு,சமூக சேவைக்கான மெகா மகளிர் விருது மற்றும் வாழ்நாள் சாதனை யாளருக்கான
மெகா விருது வழங்கப்பட்டன.
மேலும் இந்த விழாவில் தமிழறிஞர் மணிமேகலை கண்ணன், யோகா சிகிச்சையாளர் மேனகா தேசிகாச்சார், சமூக தொழில் முனைவோர் WE இதழ் ஆசிரியர் சுமதி சீனிவாசன்,
தொழில் முனைவோர் நஜ்முன்னிஸா, ஜெயஸ்ரீ லட்சுமிவராகன்,
செல்வி மீனாட்சி ராகவன், ராஜஸ்ரீ உள்ளிட்ட பலதுறை சாதனை பெண்மணிகளுக்கும் மெகா மகளிர் சாதனையாளர் விருதுகளை மெகா தொலைக்காட்சி குழும நிறுவனரும்,முன்னாள் மத்திய அமைச்சருமான கே.வி.தங்கபாலு மற்றும் மெகா தொலைக்காட்சி மேலாண்மை இயக்குநர் திருமதி.ஜெயந்தி தங்கபாலு

ஆகியோர் இணைந்து விருதுகளை வழங்கி கவுரவித்தனர்.

இந்த விழாவில் சமூக சேவை மற்றும் வாழ்நாள் சாதனையாளர் உள்ளிட்ட 2 விருதுகளை பெற்ற
டாக்டர்.நந்தினி ஆசாத் குறித்தும், அவரது சேவைகள் குறித்த ஆவணப்படமும் ஒளிபரப்பட்டது.

உழைக்கும் பெண்கள் சங்கம் (இந்தியா) மற்றும் இந்திய பெண்களுக்கான கூட்டுறவு வலையமைப்பின்
(Working Womens Forum (India)& Indian Cooperative Networks for Women) தலைவராக பொறுப்பு வகிக்கும் டாக்டர்.நந்தினி ஆசாத், ஆசிய நாடுகள் மற்றும் உலக அளவில் செயல்படும் கூட்டுறவு அமைப்புகளோடு தொடர்புடையவராகவும் 50 ஆண்டுகள் பழமைவாய்ந்த சர்வதேச கூட்டுறவு அமைப்பின் முதல் பெண் உறுப்பினராகவும்- ஆசிய-பசிபிக் கூட்டுறவு கூட்டணியின் பொறுப்புத் தலைவராகவும் பணியாற்றி வருகிறார்.

பெண்களின் சுய முன்னேற்றத்துக்காக பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். இந்தியா-இலங்கை- நேபாளம்- மாலத்தீவு மற்றும் கம்போடியா ஆகிய நாடுகளில் நிலவும் வறுமை,பாலினம், நிதி நிர்வாக செயல்முறை, பாலின அடிப்படையிலான வன்முறை ஆகியவை குறித்தும் விரிவாக ஆய்வு செய்து பல ஆய்வறிக்கைகளை வழங்கி உள்ளார்.இதற்காக பல விருதுகளையும் பெற்றுள்ளார்.

இந்தியாவில் சுய தொழில் செய்வதில் ஆர்வமிக்க வறுமை நிலையில் உள்ள ஏழை-எளிய பெண்களுக்கு தகுந்த பயிற்சிகளை அளிப்பதுடன், அவர்களின் தொழிலுக்கு தேவையான பொருளாதாரத்தை- முதலீடுகளை கடனுதவியாக
(மைக்ரோ பைனான்ஸ்) கொடுத்தும் உதவி வருகிறார்.

மேலும் தொழிலில் முன்னேற தொடர்ச்சியான வழிகாட்டுதலையும், ஆலோசனைகளையும் வழங்கி வருகிறார்.

இவரது வழிகாட்டுதலின் காரணமாக தமிழ்நாடு,ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் பல்லாயிரக்கணக்கான பெண்கள் சிறு -குறு தொழிலில் ஈடுபட்டு வருவதுடன், நல்ல வருமானம் ஈட்டும் பெண் தொழில் அதிபர்களாக, முனைவோர்களாக உருவாகி உள்ளனர்.

இந்தியாவில் மத்திய அரசு செயல்படுத்தும் பல்வேறு மக்கள் நலத் திட்டங்களுக்கு ஆலோசனை வழங்கும் குழுவில் இடம் பெற்று சேவையாற்றியதுடன்,
ஐ.நா. சபை உள்ளிட்ட சர்வதேச அளவிலான பெண்கள் அமைப்பில் அங்கம் வகித்து மகளிர் முன்னேற்றத்துக்கு தொடர்ந்து தொண்டாற்றி வருகிறார்.

இதனை கவுரவிக்கும் வகையில் சமூக சேவைக்கான மெகா மகளிர் விருது மற்றும் மெகா வாழ்நாள் சாதனையாளர் விருது ஆகிய 2 விருதுகள் டாக்டர். நந்தினி ஆசாத்துக்கு வழங்கி கவுரவிக்கப்பட்டது.

மெகா மகளிர் விருதுகளை பெற்றுக் கொண்டு ஏற்புரையாற்றிய நந்தினி ஆசாத் பேசுகையில்..

எனது சேவைகளை பாராட்டி உலகின் பல நாடுகள் வாழ்நாள் சாதனையாளர் உட்பட பல விருதுகளை அளித்து கவுரவித்துள்ளன.
ஆனாலும் நான் பிறந்த எனது சொந்த மண்ணான தமிழ்நாட்டில் எனக்கு வழங்கபபட்டுள்ள இந்த மெகா மகளிர் விருது எனக்கு மிகவும் பெருமையையும் கூடுதல் மகிழ்ச்சி யையும் தந்துள்ளது எனக் குறிப்பிட்டார்.