சென்னை :பாரதி மகளிர் கல்லூரி சார்பில் உலக மகளிர் தின விழா நிறுவன ஆற்றல் எனும் தலைப்பில் சென்னையில் நடைபெற்றது.
இந்த விழாவுக்கு கல்லூரி பொறுப்பு முதல்வர் முனைவர் லதா ஃபென் தலைமை வகித்தார்.
அண்ணா பல்கலைக்கழக கல்வி மல்டிமீடியா ஆராய்ச்சி மைய பேராசிரியர் முனைவர் சி.டி. அனுராதா சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு பெண்களின் முன்னேற்றம், பெண்ணுரிமைகள், கல்வி குறித்து பேசினார்.
இக்கல்லூரி மாணவியர்கள் தயாரித்த பொருட்கள் கண்காட்சி மற்றும் விற்பனை நடைபெற்றது.
உலக மகளிர் தினவிழாவில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற பேராசிரியர்கள், மாணவியர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
இவ்விழாவில் கல்லூரியில் செயல்படும் பாரதி மாணவியர் மன்றம், மகளிர் மேம்பாட்டு மையம், குடிமக்கள் நுகர்வோர் மன்றம், செஞ்சிலுவை சங்கம், பசுமை மன்றம், மகளிர் தொழில்முனைவோர் மேம்பாட்டு மன்றம், வேலை வாய்ப்பு பிரிவு, என்.சி.சி, சிவப்பு நாடா பிரிவு, நாட்டு நலப்பணித் திட்டம் மாணவியர்களின் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.


