உயிரில்லா பொருட்களுக்கும் உயிரூட்டும் போது நிம்மதியும் அமைதியும் தானாக அமையும்:சமூக ஆர்வலர் கல்யாணந்தி!
சென்னை:
புத்தர் என்றாலே நமக்கு அமைதி, நிம்மதி, நிதானம் என்றெல்லாம் தானே தோன்றும். விடுமுறை நாட்கள் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கூட முழுநேரமும் இயந்திரமாக செயல்படும் நமக்கு ஒரு சின்ன இடைவெளி வேண்டுமென்றால் நமது வீடு மற்றும் வீட்டை சுற்றியுள்ள பொருட்களை கொண்டு அழகு படுத்துவதும், ஆக்கபூர்வமாக, நமது வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு அழகு படுத்திப்பார்ப்பது கூட ஒரு பெரிய சந்தோசத்தை தருகின்றது.
பைசா செலவில்லாமல், இருக்கும் இடத்திலேயே நமக்கும் சந்தோசம் கிடைக்கின்றது.

நம்மை பார்த்து வளரும் நமது தலைமுறை குழந்தைகளுக்கு புத்தரின் வரலாறு, நீரின் முக்கியத்துவம், வீட்டில் செடி வளர்க்கும் முறைகள் அதாவது மனி பிளான்ட் போன்ற இயற்கை தாவரங்கள் எவ்வாறு நீரிலும் வளரும், அதன் வேர்கள், எனக் கொஞ்சம் தாவரவியல் மற்றும் மறுசுழற்சி செய்து எவ்வாறு நம் வீட்டை அழகு படுத்த முடியும் என குழந்தைகளோடு பேசிக் கொண்டே செய்து முடித்து உயிரில்லா பொருட்களுக்கும் உயிரூட்டும் போது நிம்மதியும் அமைதியும் சேர்ந்தே அமையும்.
(கல்யாணந்தி
சமூக ஆர்வலர் மற்றும்
மனநல ஆலோசகர்)
