வாசவி கிளப்ஸ்  இண்டர்நேஷனல் DISTRICT V502A சார்பில் மாபெரும் இலவச மருத்துவ முகாம் மற்றும் இரத்த தானம் முகாம்! 

சென்னை:வாசவி கிளப்ஸ்  இண்டர்நேஷனல் DISTRICT V502A  சார்பில் மாபெரும் இலவச மருத்துவ முகாம் மற்றும் இரத்த தானம் முகாம் செளக்கார் பேட்டையிலுள்ள டி.டி.வி. மேல்நிலைப்பள்ளியில்  நடைப்பெற்றது. 

இந்நிகழ்வில்  ஆளுநர் வி. எஸ். செந்தில்குமார் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு முகாமை துவக்கி வைத்தார். செயலாளர் சி.எம்.ராஜேஷ் மற்றும் பொருளாளர் பி. ஆர். துவாரகநாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் இதில் முன்னாள் ஆளுநர்கள் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர். 

இந்த முகாமை திட்ட தலைவர் மற்றும் சர்வதேச திட்ட ஒருங்கிணைப்பாளர் எஸ்.எஸ். ஜெகதீஸ் அவர்கள் தலைமை வகித்து சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார். 

மேலும் இந்நிகழ்வில் கண் பரிசோதனை, மன ஆரோக்கியம் குறித்த  முழுமையான உளவியல் ஆலோசனை,  ஆர்த்தோ மற்றும் பிசியோதெரபி ஆலோசனை, பல் பரிசோதனைநீரிழிவு நோய் பரிசோதனை,இ.என்.டி பரிசோதனை மற்றும் லயன்ஸ் இரத்த வங்கி  ஆராய்ச்சி அறக்கட்டளையின் குருதி கொடை முகாம் உள்ளிட்டவைகள் நடைப்பெற்றது. 

மேலும் இம்முகாமில் 150 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பரிசோதனைகள் மேற்கொண்டு பயன் பெற்றனர். 

மேலும்  இம்முகாமில் கலந்துக்கொண்டு குருதி கொடை அளித்த அனைவருக்கும் சான்றிதழ் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

 இம் முகாமில் கலந்துக்கொண்ட  மருத்துவர்கள், உதவி மருத்துவர்கள், மாணவர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட வர்களுக்கு காலை மற்றும் மதிய உணவு வழங்கப்பட்டது.