நேற்று இரவு முதல் பெய்து வரும் கன மழை காரணமாக இன்று அதிகாலை திருவல்லிக்கேணி பிள்ளையார் கோவில் தெருவிலுள்ள பழமையான ஆலமரம் வேரோடு சாய்ந்து அருகில் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோ மீது விழுந்தது.

மரத்தின் அருகில் இருந்த பழமையான அடுக்குமாடி கட்டிடமும் இடிந்து விழுந்தது.
மரமும் கட்டிடமும் சாய்ந்தது அதிகாலை நேரம் என்பதால் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.

விபத்து நடந்த பகுதியில் மின்வாரிய ஊழியர்கள் மின்தடை செய்துள்ளனர். மாநகராட்சி ஊழியர்கள் மரம் மற்றும் கட்டிட இடிபாடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.