கல்வி மற்றும் சமூக பணிகளில் சிறப்பாக செயல்பட்டு வரும் இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் மருதையார் அவர்களின் பேரன் ஏ. எஸ். ஏ.
தெட்சணாமூர்த்தி அவர்களுக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பாராட்டு!

சென்னை:காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் வாரிசுகளில் தற்போது சிறப்பாக செயல் படுவோர்கள் யார் என்று தமிழ்நாட்டில் சிறந்த பல்கலைக்கழகம் கணக்கு எடுத்தது.

அதில் சுதந்திரப் போராட்ட வீரர் மருதையார் செட்டியார் அவர்களின் பேரனும்.
நேதாஜி மருதையார் கல்வி அறக்கட்டளை மூலம் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களுக்கு தொடர்து கல்விக்கு பெரிதும் உதவி வரும் நேதாஜி மருதையார் கல்வி நிறுவனர்
லயன்ஏ.எஸ்.ஏ.தெட்சணாமூர்த்தி அவர்களை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் ஆளுநர் மாளிகைக்கு அழைத்து பாராட்டி கௌரவப்படுத்தினார்.



