வடசென்னை கிழக்கு மாவட்டத்திற்குட்பட்ட திரு.வி.க நகர், வடக்கு பகுதி சார்பில் மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் வாழ்வாதாரம் இழந்து தவித்து வரும் சாலையோரம் வசிக்கும் பழங்குடியின மக்களுக்கு நிவாரண உதவிகள்!

சென்னை:வடசென்னை கிழக்கு மாவட்டத்திற்குட்பட்ட திரு.வி.க நகர், வடக்கு பகுதி திமுக சார்பில் மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் வாழ்வாதாரம் இழந்து தவித்து வரும் சாலையோரம் வசிக்கும் பழங்குடியின மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கும் நிகழ்வு தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் மற்றும்
இந்து அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர்களின் ஆலோசனையின் பேரில் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன் மற்றும்
திரு.வி.க நகர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் வழக்கறிஞர் பா. தாயகம் கவி ஆகியோரின் அறிவுறுத்தலின் பேரில் பொறியாளர் அணி மாவட்ட துணை தலைவர்
முனைவர் பி.ஜெ.செங்கை சத்யா அவர்களின் ஏற்பாட்டில் சென்னை சேத்பட் இராமநாதன் சாலை ஓரத்தில் வசிக்கும் ஏழை, எளிய மக்களுக்கு நிவாரண உதவிகளாக புடவை, நைட்டி, வேட்டி ,பேண்ட் சர்ட் மற்றும் குழந்தைகளுக்கு உடை மற்றும் உணவு வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் கழக பொறியாளர் அணி மாநில நிர்வாகிகள்
வார்டு உறுப்பினர் மற்றும் வட்ட கழக செயலாளர் சுந்தர்ராஜ்,
இந்திய மக்கள் உரிமை நீதி பொது நலச் சங்கம் மத்திய சென்னை மாவட்ட செயலாளர் வேலாயுதம்,தொழில் நுட்ப பிரிவு செயலாளர்கள் அந்தோனி ஏசு, மணி ஜெகதீஷ்,
கொளத்தூர் மகளிர் அணியை சேர்ந்த வசந்தா, புஷ்பலதா, கல்பனா, கிரிஜா சித்ரா மற்றும் ஸ்ரீதன்,கழக செயல் வீரர்களான நெல்சன் இரவி ஆகியோர்
கலந்து கொண்டனர்.