ஊரப்பாக்கம்:
இந்தியாவின் மிகவும் நம்பகமானதும், பொது மக்களிடையே ஏகோபித்த வரவேற்பைப் பெற்றிருக்கும் ஜூவல்லரி பிராண்டான தனிஷ்க் தமிழகத்தில் உள்ள சென்னை ஊரப்பாக்கத்தில் புதிய விற்பனை மைய கிளை துவக்க விழா நடைப்பெற்றது.

இந்த நிகழ்வில் தனிஷ்க் விற்பனை மையம் மற்றும் டைட்டன் கம்பெனி லிமிடெட்டின் நிர்வாக இயக்குநர் சி.கே. வெங்கட்ராமன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

மேலும் இந்த துவக்க விழாவில் டைட்டன் கம்பெனி லிமிடெட்டின் தெற்கு பிராந்திய வர்த்தகப் பிரிவு தலைவர் ஷரத் மற்றும் தனிஷ்க்கின் தெற்கு பிராந்திய வர்த்தக மேலாளர் திரு. நரசிம்மன்.ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த துவக்க விழாவின் ஒரு பகுதியாக நகை வாங்கும் ஒவ்வொருவருக்கும் ஒரு தங்கக் காசு இலவசமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சலுகை டிசம்பர் 15 மற்றும் 17 முதல் 19 வரையிலான நாட்களில் மட்டுமே செல்லுபடியாகும்.

3400 சதுர அடி கொண்ட மிகப் பிரம்மாண்டமான பரப்பளவில், எண்: 86, ஜி.எஸ்.டி. முக்கிய சாலை ஊரப்பாக்கம், சென்னை என்கிற முகவரியில் சுமார் 4000-க்கும் அதிகமான தங்கம், வைரம், நவரத்தினம் மற்றும் பிளாட்டினம் நகைகளை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது.

தனிஷ்க்கின் ரிவா திருமண நகைகள் மணப்பெண்களுக்கென பிரத்யேகமான சில கவர்ச்சி மிக்க டிசைன்களை அறிமுகம் செய்துள்ளது. மேலும் இந்த விற்பனை மையத்தில் தனிஷ்க் கின் சிறப்பு தொகுப்புகளான
பாரம்பரிய வடிவமைப்புடன் கூடிய நவீன மாடலும் கலந்து அழகிய வடிவமைப்பில் தயாரான ஸ்டோரிஸ் ஆஃப் சம்மர் ஏகத்வம் , ஆரம்ப் , உத்ஸா உள்ளிட்ட நகைத்தொகுப்புகளையும் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது.

ஒவ்வொரு நகையையும் தனித்துவமான வடிவமைப்பு மற்றும் சிறப்பான கலை வேலைப்பாடுகளுடன் செய்யப்பட்டு விற்பனைக்கு வந்துள்ளது.

இந்த துவக்க விழாவில் சவுத்-டைட்டன் கம்பெனி லிட், தெற்கு மண்டல வர்த்தக பிரிவு தலைவர் சரத் அவர்கள் கலந்து கொண்டு பேசுகையில், சென்னை ஊரப்பாக்கத்தில் எங்களது புதிய கிளையான விற்பனை மையம் தொடங்குவது குறித்து அறிவிப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகின்றேன். தமிழ்நாடு எங்களுக்கு குறிப்பிடத்தக்க சந்தையாகவும், தனிஷ்க் உற்பத்தி வளாகமாகவும் உள்ளது. மேலும் எங்களின் பெரும் மதிப்புக்குரிய வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவை மற்றும் சலுகைகளை வழங்குவதே எங்களது மாறாத எண்ணமாகும்.
இந்த புதிய மிகப் பெரிய கிளையின் மூலம் பல்வேறு தரப்பிலான வாடிக்கையாளர்களுக்கு பாரம்பரிய மற்றும் சமகால வடிவமைப்புகள் கொண்ட பல்வேறு விதமான ரசனைகள் மற்றும் விருப்பங்களுக்கு ஏற்ற வகையில் நகைகளை வழங்கும்.
மேலும் தங்கத்துக்கான பாதுகாப்பு தர நிர்ணய விதிமுறைகளை பின்பற்றி, தொலைதூர விற்பனை வாய்ப்புகளுடன் கூடிய, வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பானதும் சொகுசானதுமான ஒரு ஷாப்பிங் அனுபவத்தை நாங்கள் தருகிறோம் என்றார்.