ஆற்காடு:
தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தின் மாநில அமைப்பின் ((TNTA) மாநில நல்லாசிரியர் விருது வழங்கும் விழா ,பணி நிறைவு பெற்ற ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் விழா ,நிறுவனத் தலைவர் பி.கே இளமாறன் அவர்களின் நினைவாக சீர்மிகு ஆசிரியர் விருது வழங்கும் விழா என முப்பெரும் விழா ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காட்டில் ஜன சங்க அரங்கில் சிறப்புற நடைபெற்றது.

இவ்விழாவிற்கு ராணிப்பேட்டை மாவட்ட தலைவர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் தலைமை தாங்கினார். ராணிப்பேட்டை மாவட்ட செயலாளர் கி. வைத்தியநாதன் அவர்கள் முன்னிலை வகித்தார்.

மாநில தகவல் தொழில்நுட்ப செயலாளர் க.ரமேஷ் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். மேலும் இந்நிகழ்ச்சியில் மாநில நல்லாசிரியர் விருது பெற்ற இரா.சி.வாசவி இராணிப்பேட்டை மாவட்ட மகளிர் அணி செயலாளர், பழ.சீனிவாசன் தொடக்க நடுநிலைப் பள்ளிகள் தலைமை ஆசிரியர் பிரிவு மாநில செயலாளர், விழுப்புரம் மாவட்ட செயலாளர் சி. பாஸ்கரன், சென்னை மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் எஸ்.நீலா திருவாரூர் மாவட்ட செயலாளர் க. மணிகண்டன் ஆகிய மாநில நல்லாசிரியர் விருது டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்றோர்களுக்கு நினைவு பரிசு வழங்கி மாநில பொதுச் செயலாளர் வெ. சரவணன் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.

பணி நிறைவு பெற்ற ஏ. அருள்ராஜ், என்.மோகனம், கே. குட்டியம்மாள், டி.அகஸ்டின் ராஜ் ஆகியோர்களுக்கு நினைவு பரிசு வழங்கி மாநில பொருளாளர் த. ராமஜெயம் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.
பி.கே இளமாறன் அவர்களின் நினைவாக வழங்கப்படும் வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற மாநில மகளிர் அணி ஒருங்கிணைப்பாளர் மு.செல்லத்தாயி,
அவர்களுக்கு நினைவு பரிசு வழங்கி புதுச்சேரி மாநில தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் முனைவர் சீனு தண்டபாணி அவர்கள் சிறப்புரை ஆற்றினார் .
சீர்மிகு ஆசிரியர் விருது பெற்ற 23 ஆசிரிய பெருமக்களுக்கு ஆற்காடு நகர காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் அண்ணாமலை,ரகு ஆகியோர் நினைவு பரிசு வழங்கி சான்றிதழ் வழங்கி வாழ்த்துரை வழங்கினர்.

இதில் மாநில அமைப்பு செயலாளர் பூ. ஜெகன், திருவண்ணாமலை மாவட்ட செயலாளர் நீல நாராயணன், வேலூர் மாவட்ட செயலாளர் மைக்கேல் ராஜ், ராணிப்பேட்டை மாவட்ட பொருளாளர் வே.சுரேஷ் பாபு ராணிப்பேட்டை மாவட்ட அமைப்பு செயலாளர் சு. ராதாகிருஷ்ணன், ராணிப்பேட்டை மாவட்ட மகளிர் அணி செயலாளர் எஸ். விஜயலட்சுமி, ராணிப்பேட்டை கல்வி மாவட்ட பொருளாளர் டி. வசந்தி, ராணிப்பேட்டை கல்வி மாவட்ட துணை தலைவர் கி. விஜயலட்சுமி, ஆற்காடு வட்டார தலைவர் வா ஸ்ரீதர், ஆற்காடு வட்டார பொருளாளர் கோ.மோகனா,ஆற்காடு வட்டார மகளிர் அணி தலைவி கோ. பிரேமலதா , ஆற்காடு வட்டார மகளிர் அணி துணைத்தலைவி எஸ் .மீனாட்சி, பொதுக்குழு உறுப்பினர் பி பெருமாள் ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள்.
இறுதியில் ராணிப்பேட்டை மாவட்ட துணை செயலாளர் எம். சத்யராஜ் அவர்கள் நன்றியுரை நல்கினார்.
