கள்ளக்குறிச்சி:
தமிழ்நாடு மது ஒழிப்புக்கான மக்கள் கூட்டியக்கத்தின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
கள்ளக்குறிச்சி சங்க அலுவலகத்தில். தலைவர் புலவர் மோகன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. முனைவர் நா. சு. செல்வராஜ் அவர்கள் முன்னிலை வகித்தார்.
மேலும் இதில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன
இவ்வியக்கத்தில் அடிப்படை உறுப்பினர்களை சேர்ப்பது, உறுப்பினர் சந்தா வாக ஆண்டுக்கு ரூ100/ம். உறுப்பினர் அடையாள அட்டைக்காக ரூ50/ம் கட்டணமாக நிர்ணயித்து முடிவு செய்யப்பட்டது.
இவ்வியக்க உறுப்பினர் களின் செயல்பாடுகளை பரிசீலித்து அதன் அடிப்படையில் ஆண்டு தோறும் உறுப்பினர்களைபுதுப்பிப்பது என முடிவு செய்யப்பட்டது.
கிராமங்கள் தோறும் இவ்வியக்கத்தை துவக்கி மக்களைத் திரட்டி. மது இல்லா மாநிலமாக தமிழகத்தை மாற்றுவது என முடிவு செய்யப்பட்டது.
இவ்வியக்கத்தின் அடுத்த நிர்வாக குழு கூட்டத்தை செப்டம்பர் 01.09.2024 ஞாயிறுக்கிழமை காலை 10.00 மணிக்கு கள்ளக்குறிச்சி ஏ. கே.டி.தங்கும் விடுதி கூட்ட அரங்கில் தலைவர் புலவர் அய்யா மோகன் அவர்கள் தலைமையில் நடைபெறும்.
அதனால் அனைத்து நிர்வாக குழுறுப்பினர்களும் தவறாமல் கலந்து கொண்டு உறுப்பினர் சேர்க்கைக்கும். புதிய கிளைகளை கிராமங்களில் துவக்கி உறுதுணையாக இருக்க வேண்டும்.
எனவே இக்கூட்டத்தில் தவறாமல் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டது.
இறுதியில் துணை செயலாளர் அன்பழகன் அவர்கள் நன்றியுரை நல்கினார்.
