தமிழ்நாடு அரசு புள்ளிஇயல் சார்நிலை அலுவலர் சங்கம் மாநில மையத்தின் காணொளி வழியாக மாநில நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் மாநில தலைவர் தோழர் ஜே.பால்ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது.

பொதுச்செயலாளர் தோழர். இரா.இரமேஷ் நடந்து முடிந்த வேலைகள் பற்றி விவரித்தார்.

மாநில நிர்வாகிகள் அனைவரும் கலந்துக்கொண்ட இக்கூட்டத்தில் துறையில் நடைபெற்று வரும் நிர்வாக குளறுபடிகள், தங்கள் பொறுப்பு மாவட்டங்களில் உள்ள இடற்பாடுகள் மற்றும் பிரச்சனைகள் குறித்து மாநில நிர்வாகிகள் விரிவாக விவாதித்தனர்.

சமீபத்தில் துறையில் நடைப்பெற்ற கலந்தாய்வுகள் மற்றும் ரத்து செய்யப்பட்ட கலந்தாய்வு சம்பந்தமாகவும்,
சமீபத்தில் வெளியிடப்பட்ட புள்ளிஇயல் ஆய்வாளர் முதுநிலைப்பட்டியல் மற்றும் துறை செயல்பாடுகள் குறித்து விரிவாகவும் விவாதிக்கப்பட்டது.
உத்தரவாதமளித்தவாறு ஓரளவிற்கு நேர்மையாக கலந்தாய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது என்று கருதிக்கொண்டிருந்த நிலையில் புள்ளிஇயல் ஆய்வாளர் கலந்தாய்வில் பல்வேறு குளறுபடிகளை காண நேர்ந்தது.

இயக்குநரே நேரடியாக தலையிட்டு கலந்தாய்வினை ஒத்திவைக்க வேண்டிய சூழ்நிலையை நிர்வாகம் ஏற்படுத்தி வைத்திருக்கிறது.
200க்கும் அதிகமோனோர் பல ஆயிரங்களை செலவழித்து கலந்தாய்விற்கு வந்த நிலையில் கலந்தாய்வு ஒத்திவைக்கப்படும் சூழல் ஏற்பட்டது தொடர்பாகவும் தொடர்ந்து இவ்வாறே குழப்பங்கள் ஏற்படுத்துவது தொடர்பாகவும் துறை நிர்வாகப் பிரிவில் எந்தவிதமான சலனமும் இல்லாமல் இருப்பது ஊழியர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இது போன்ற தொடர்ச்சியாக திட்டமிட்டு ஏற்படுத்தி வரும் தவறுகளுக்கு காரணமானவர்கள் யாரும் பொறுப்பேற்காமல் இருக்கையாளர்களை பொறுப்பாக்கிக் கொண்டு ஒதுங்கி விடுகிறார்கள்.

புள்ளிஇயல் உதவி இயக்குநர் நேரடி நியமனத்திற்கு தேர்வாணையம் மூலம் 17 பேர் தேர்வு செய்வதற்கு அறிவிக்கை செய்திருந்தது.

அதற்கு எதிரான வழக்கின் போது எண்ணிக்கை தவறு என்று 13 பேர் தேர்வு செய்ய மீண்டும் அறிவிக்கை செய்யப்பட்டுள்ளது. ஒருவேளை வழக்கு தொடரப்படாமலிருப்பின் துறை நிர்வாகப்பிரிவின் தவறு வெளியே வராமலே போயிருக்கும் .
துறை நிர்வாகப் பிரிவில் தொடர்ந்து இத்தகைய குளறுபடிகள் நடைபெறும் நிலையில் பலமுறை முறையீடு செய்தும் இயக்குநர் நடவடிக்கை எடுக்காமல் அமைதியாக கடந்து போவது ஊழியர் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது .

சாத்வீகமான முறையில் நடத்தப்படும் உச்சபட்ச போராட்டமுறையை சட்ட விரோதம் என அறிவிப்பு செய்தது இந்த துறையை தவிர உலகில் வேறு எங்கும் இல்லை. அதுவும் முன்னணியில் இருந்த தோழர்களின் பெயர்களைக் கூட சேர்க்காமல் எண்ணிக்கையை குறைத்து காட்டிட மெனக்கெட்டது தெளிவாக தெரிகிறது.

இத்தகைய சூழ்நிலையில் மாநில நிர்வாகிகள் கூட்ட விவாதங்களின் அடிப்படையில் வருகின்ற 20.07.2024 சனிக்கிழமை அன்று வேலூர் மாவட்டத்தில் மாநில செயற்குழு கூட்டம் நடத்துவதென முடிவெடுக்கப்பட்டது.

மாநில பொருளாளர் தோழர். முனைவர். சீ.அண்ணாமலை நன்றி கூற கூட்டம் நிறைவுற்றது.

இச்செயற்குழுவில் அனைத்து மாவட்ட தலைவர் கள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் தங்கள் மாவட்ட கூட்டத்தினை நடத்தி அதன் அடிப்படையில் இந்த மாநில செயற்குழுவில் தவறாது கலந்துகொண்டு விவாதத்தில் பங்கேற்க கேட்டுக்கொள்ளப்பட்டனர்.