சூளை:கைகளை உயர்த்துவோம் அமைப்பின் நான்காம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு இலவச மருத்துவ முகாம் மற்றும் கண் சிகிச்சை முகாம் சூளை மார்கெட் பகுதியில்
இந்த அமைப்பின் மாநிலத் தலைவர் வழக்கறிஞர் லோகேஷ்குமார் அவர்கள்
தலைமையில் நடைப்பெற்றது.

மேலும் இந்த அமைப்பின் கொடியை ஏற்றி வைத்து புரட்சியாளர் அம்பேத்கர் திருவுருவப்படத்திற்க்கு மலர் தூவி மரியாதை செய்து தலைமை ஆலோசகர் ராமு அவர்கள் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.

மேலும் இந்த அமைப்பின் சார்பில் பொது மக்களுக்கு இலவச பொது மருத்துவ சிகிச்சை மற்றும் இலவச கண் பரிசோதனை சிகிச்சை முகாம் நடைப்பெற்றது.
மேலும் இந் இந்நிகழ்வில் மாநில பொருளாளர் நந்தகுமார், முதன்மை தலைமை ஆலோசகர் சங்கர், திருநங்கை முனைவர்.ஆனந்தி அம்மா, மத்திய சென்னை மாவட்ட தலைவர் சிவா,வட சென்னை மாவட்ட தலைவர் ரவி ,மாநில நிர்வாகிகளான நிவேஷ் ஆர்.மோகன், வி. மோகன், மகேஷ், ஜெய், சிவசங்கர், மற்றும் வட்ட தலைவர் திலீப் யுவராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இந்த இலவச மருத்துவ முகாமில் சுமார் 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்..
