பெரம்பூர் :பகுஜன் குரல் மாத இதழ் தலைமை அலுவலகம் மற்றும் இந்திய வெகுஜன பத்திரிக்கையாளர் சங்கம் திறப்பு விழா பெரம்பூர் லூர்து அன்னை திருத்தலம் அருகில் நடைப்பெற்றது.இந்நிகழ்வில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் கே.ஆம்ஸ்ட்ராங் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டு ரிப்பன் வெட்டி புதிய அலுவலகத்தை திறந்து வைத்தார்.

மேலும் இந்நிகழ்வில் அதிரடி குரல் ஆசிரியரும், தென்னக பத்திரிக்கையாளர் நலச்சங்கத்தின் மாநில பொதுச் செயலாருமான வி.என் ஜெயகாந்த் மற்றும் தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்கத்தின் மாநிலத் தலைவர் சுபாஷ் ஆகியோர் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர்.

பத்திரிக்கையாளர்களான மதி ஒளி ராஜா, சென்னை கிளிட்ஸ் சக்திவேல் தங்கமணி,கடற் சிற்பி முருகேசன் உள்ளிட்ட ஊடக துறை நிர்வாகிகள், காவல் துறையினர், வழக்கறிஞர்கள், பகுஜன் கட்சி பொருப்பாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஆகியோர் கலந்துக் கொண்டு பகுஜன் குரல் ஆசிரியர் ஜெகதீஸ் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர். கலந்து கொண்டனர்.

