இராயபுரம் : மாண்ட்போர்டு ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் 19-வது மாண்ட்போர்டு அரிஸ் டிராபி விளையாட்டு போட்டிகள் சென்னை ராயபுரத்தில் உள்ள புனித பீட்டர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

இதில் கைப்பந்து, கையுந்து பந்து,கூடைப்பந்து விளையாட்டுக்களில் ஆண்கள், பெண்களுக்கென தனித்தனியாகப் போட்டிகள் நடத்தப்பட்டன.

ஒவ்வொரு விளையாட்டுக்களிலும் தலா 16 அணிகள் பங்கேற்றன. இதில் மூன்று விளையாட்டு போட்டிகளிலும் முதலிடத்தை புனித பீட்டர் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கைப்பற்றினர்.
இரண்டாமிடம்,மூன்றாமிடம்,
நான்காமிடங்களை பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த அணிகள் கைப்பற்றின.

இந்த விளையாட்டு போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழாவில் பள்ளி தாளாளர் அருட் சகோதரர் ஜான்சன், தமிழ்நாடு கைப்பந்து விளையாட்டு சங்க தலைவரும்,அரிஸ் பவுண்டேசன் நிறுவனருமான ஆதவ் அர்ஜூனா,சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் செல்வ ராஜ்குமார் ஆகியோர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக்கொண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ,மாணவிகளுக்கு மெடல் , பரிசு கோப்பைகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி சிறப்பித்தனர்.

மேலும் இந்த நிகழ்ச்சியில்
பள்ளியின் காசாளர் பீட்டர்ராஜ், உடற்கல்வி ஆசிரியர் புஷ்பராஜ்,கிங்ஸ்லி,எரிக் மைக்கேல் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்…