மாத்தூர்: 75- வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மாத்தூர் பொது வியாபாரிகள் சங்கம் சார்பில் கொடியேற்று விழா, சங்க உறுப்பினர்கள் பிள்ளைகளின் கல்வி ஊக்கத்தொகை வழங்கும் விழா மற்றும் புதிய மாநில பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள வியாசை எம். மணி அவர்களுக்கு பாராட்டு விழா உள்ளிட்ட முப்பெரும் விழா சங்க அலுவலக கட்டிடத்தில் மாத்தூர் பொது வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் அரிமா முனைவர் எஸ்.தங்கக்குமார் குமார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

மேலும் இந்த நிகழ்வில் தமிழ்நாடு வணிகர் சங்க பேரவையின் மாநில தலைவர் த. வெள்ளையன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு வாழ்த்துரை வழங்கினார்.

மேலும் அவர் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு கல்வி ஊக்கத் தொகையை சங்க நிர்வாகிகளுடன் இணைந்து வழங்கினார்.

மேலும் இந்நிகழ்வில் சங்கத்தின் பொதுச்செயலாளர் அரிமா எம். அந்தோணி தாஸ் அவர்கள் முன்னிலை வகித்தார். இச்சங்கத்தின் பொருளாளர் வி. ஜெயபாலன் அவர்கள் வரவேற்பை நல்கினார்.

இச்சங்கத்தின் துணைத் தலைவர் சுந்தர்ராஜன் நன்றியுரை ஆற்றினார்.
மேலும் இந்த நிகழ்வில் சங்க உறுப்பினர்கள் குடும்பத்துடன் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர்.