குரோம்பேட்டை:
சிங்கப்பூரை சேர்ந்த எவர்கீரின் ஹார்ட் பீட் குழுவினர் மற்றும் இசையமைப்பாளர் டேவிட் சந்திர ராஜா அவர்களது தலைமையில் தொடர் இசை மராத்தான் நிகழ்ச்சி நடத்தி உலக சாதனை படைத்தனர்.

இந்த நிகழ்ச்சியில் சிங்கப்பூர் கலைஞர்கள் இந்திய சினிமா பாடல்கள் தமிழ் மற்றும் இந்தி 125 பாடல்களை தொடர்ந்து பாடினர்கள்.
1970 ஆண்டு முதல் 2000 வரை வெளிவந்த பாடல்கள் பாடி புதிய சாதனை நிகழ்த்தினர்.
இந்த நிகழ்ச்சியினை மலேசியா சிங்கப்பூர் அட்ஜடிகேட்டர் முனைவர் ராகவி பவன், இந்தியாவை சேர்ந்த தலைமை நிர்வாக அதிகாரி
செல்வம் உமா ஆகியோர் ஆய்வு செய்தனர்.

லிங்கன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நிறுவன தலைவர் ஜோசப் இளந்தென்றல் அவர்கள் சான்றிதழ் வழங்கி கவுரவித்தார். தலைமை செயல் அதிகாரி கார்த்திக்குமார் முன்னிலை வகித்தார். நிர்வாகிகளான ஸ்டீபன் சீனிவாசன், சாலமன் மற்றும் தமிழ்நாடு இளைஞர் அமைப்பின் மாநில தலைவர் முனைவர் என்.எம்.ஆர்.மதன் ஆகியோர் சிறப்புரை வழங்கினார்கள்.

இந்த நிகழ்வினை சிங்கப்பூர் ராக்ஸ்ஸ்டார் மீடியா குளோபல் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுமதி, பார்ட்னர் ஈஸ்வரன், மலேசியா அட்மின்கள் வினயகேஸ்வரி, காயத்ரி, புனிதா மற்றும் கவிதா ஆகியோர் தொகுத்து வழங்கினார்கள்.

இந்நிகழ்வின் தொழில்நுட்ப ஒளிபரப்பினை ஹரிஹரன் இலக்கியா,சஞ்சய்,
ஐஸ்வர்யா அகியோர் சிறப்பாக ஒருங்கிணைத்தனர்.

இந்த நிகழ்வு ராக்ஸ்ஸ்டார் மீடியா நேரடி ஒளிப்பரப்பு செய்யப்பட்டது.இந்த நிகழ்வு இசைப் பிரியர்களை வெகுவாக கவர்ந்தது குறிப்பிடதக்கது.