குரோம்பேட்டை :சென்னை குரோம்பேட்டை பகுதியில் அமைந்துள்ள லிங்கன் உலக சாதனை நிறுவனம் கடந்த 2021, செப்டம்பர் 9 அன்று மலேசியா, ஜொகூர் பாரு ராக்ஸ்டார் மீடியா நிறுவனரும், சமாதான தூதுவருமான பவனேஸ்வரி ராகவி மணி அவர்களுக்கும் 9 நாடுகள் மற்றும் 9 மொழி 90 கலைஞர்களுக்கு (ம்) உலக சாதனை சான்றிதழ் வழங்கி கவுரவித்தது.

சென்னை முடிச்சூரில் அமைந்துள்ள வேல்ஸ் ரவீந்திர பாரதி குளோபல் பள்ளியில் முதல் வகுப்பு பயின்று வருபவர் ஜே.ஜேசன் நேசப்பிரியன் என்பவர். இந்த சிறுவன் 9 நாடுகள் கலந்துகொண்ட உலக சாதனை நிகழ்வில் இந்தியா சார்பாக மாறுவேட போட்டியில் கலந்துகொண்டு உலக சாதனை சான்றிதழ் மற்றும் பதக்கம் பெற்றார்.

9 நாடுகளிருந்து 90 கலைஞர்கள் 9 மொழிகளில் 90 விதமான கலைத்திறனை தொடர்ந்து 9 மணி நேரம் வெளிப்படுத்தினர். உலகில் முதல் முறையாக மலேசியாவை சேர்ந்த ராக்ஸ்டார் மீடியா மற்றும் சங்கீத நாட்டிய குருகுலம் இதனை ஒருங்கிணைத்து உலக சாதனை படைத்தது.

இந்த உலக சாதனை நிகழ்ச்சி மலேஷியா ஜொகூர் பாரு பகுதியில் நடைபெற்றது.
இந்த நிகழ்விற்கு சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்ட மாநில மேயர் தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். மேலும் இந்நிகழ்வில் டத்தோ புருஷோத்தமன், டத்தோ மணிசேகரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் லிங்கன் உலக சாதனை புத்தக நிறுவனத்தின் தலைவர் ஜோசப் இளந்தென்றல் அவர்கள் இந்த சாதனையை அங்கீகரித்து சான்றிதழ் வழங்கினார். தலைமை செயல் அதிகாரி கார்த்திக் குமார் வாழ்த்துரை வழங்கினார். தலைமை நிர்வாகிகள் ஸ்டீபன் சீனிவாசன், சாலமன் தினேஷ் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.
சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் பத்ம பிரியா தலைமையுரை வழங்கினார்.
இந்த நிகழ்வினை தொழில் நுட்ப ஒளிப்பரபினை நிர்வாகிகளான ஹரிஹரன், இலக்கியா, சஞ்சய் ஆகியோர் சிறப்பாக ஒருங்கிணைத்தனர். சிங்கப்பூரை சேர்ந்த ராம் மற்றும் இந்தியாவை சேர்ந்த ஐஸ்வர்யா ஆகியோர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர்.